
2025-26-ல் மத்திய அமைச்சர்களின் தில்லி வீடுகளைப் பழுதுபார்க்க ரூ.92 கோடி செலவு: ஆர்டிஐ தகவல்!
2025-26-ல் மத்திய அமைச்சர்களின் தில்லி வீடுகளைப் பழுதுபார்க்க ரூ.92 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளதைப் பற்றி...
மத்திய அமைச்சர்களின் தில்லி வீடு.
மத்திய அமைச்சர்களின் தில்லி வீடுகளைப் பழுதுபார்க்க 2025-26-ஆம் ஆண்டில் ரூ.92 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
2014 ஆம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சியமைந்ததில் இருந்து 2025-26 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட பத்தாண்டு காலத்தில் மத்திய அமைச்சர்களின் தில்லி இல்லங்களைப் பழுதுபார்த்தல், புதுப்பித்தல், பராமரிப்புப் பணிகளுக்காக சுமார் ரூ. 547.68 கோடியை மத்திய பொதுப்பணித்துறை செலவிட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரியவந்துள்ளது.
தொடர் பணவீக்கம் மற்றும் மத்திய தில்லியில் உள்ள வளாகங்களில் பழமையான கட்டமைப்புகளைப் பராமரிப்பதற்கான செலவினங்களைக் காரணம் காட்டி, 2014-ஆம் ஆண்டிற்குப் பிறகு 2025-26 ஆம் ஆண்டுக்கான இந்தச் செலவு அதிகளவில் உயர்ந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வெளியான தகவலின்படி, 2014 முதல் 2019 வரை, மேம்பாட்டுப் பணிகளுக்காக ஆண்டுக்குச் சராசரியாக ரூ. 26.78 கோடி செலவிடப்பட்டிருக்கிறது.
அதன்பின்னர், 2019 முதல் 2024 வரை சராசரியாக ஆண்டுக்கு ரூ. 50 கோடியாக உயர்ந்தது. அதைத்தொடர்ந்து 2024-25-ல் ரூ. 71.98 கோடியாகவும், 2025-26-ல் ரூ. 92.35 கோடியாகவும் உயர்ந்திருக்கிறது.
எலெக்ட்ரிக் வயர்கள் பாதிப்பு, கரையான் அரிப்பு, குழாய்கள் மாற்றுதல் உள்ளிட்ட பிரச்சினைகள், 80 முதல் 100 ஆண்டுகள் பழமையான கட்டடங்கள் என்பதால் இடித்து புதியதாக கட்டப்படும் திட்டம் இருந்ததாகவும் அதன்பின்னர் அந்தத் திட்டம் கைவிடப்பட்டாதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்திய அமைச்சரவையில் பொதுவாக சுமார் 70 முதல் 72 அமைச்சர்களும், இணை அமைச்சர்களும் இருக்கின்றனர்.
கடந்த நிதியாண்டில் ரூ.92.35 கோடியாக இருந்த நிலையில், ஒரு அமைச்சரின் இல்லத்துக்கு சராசரி செலவு சுமார் ரூ.1.2 கோடியாக அதிகரித்திருப்பதும் தெரியவந்திருக்கிறது.
கடந்த பத்தாண்டுகளில் செலவு
2014-15-ல் ரூ. 27.47 கோடி,
2015-16-ல் ரூ. 29.57 கோடி,
2016-17-ல் ரூ. 30.10 கோடி,
2017-18-ல் ரூ.23.34 கோடி,
2018-19-ல் ரூ.23.42 கோடி,
2019-20-ல் ரூ.26.37 கோடி,
2020-21-ல் ரூ. 53.87 கோடி,
2021-22- ல் ரூ.40.84 கோடி,
2022-23- ல் ரூ. 73.86 கோடி,
2023-24- ல் ரூ.54.52 கோடி,
2024-25- ல் ரூ. 71.98 கோடி
2025-26- ல் ரூ.92.35 கோடி செலவிடப்பட்டுள்ளது.
Summary
An RTI reply shows spending on Union Ministers official bungalow repairs in Delhi hit Rs 92.35 crore in 2025-26. The sharp rise, which tripled in 11 years, highlights the mounting cost of maintaining ageing colonial-era residences.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






