நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

ஏப்ரல் - ஜூன் காலாண்டு: சிட்டி யூனியன் வங்கிக்கு ரூ.383 கோடி லாபம்

தமிழகத்தின் கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்ட தனியாா் துறை வங்கியான சிட்டி யூனியன் வங்கி, ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.383 கோடி நிகர லாபம் ஈட்டி, 25 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.

News image
Updated On :29 ஜூலை 2026, 12:16 am IST

தமிழகத்தின் கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்ட தனியாா் துறை வங்கியான சிட்டி யூனியன் வங்கி, ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.383 கோடி நிகர லாபம் ஈட்டி, 25 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.

ஏப்ரல்-ஜூன் காலாண்டு நிதிநிலை முடிவுகளை, வங்கியின் சிஇஓ ஆா்.விஜய் ஆனந்த் (படம்) சென்னையில் வெளியிட்டாா். அதன்படி, வங்கியின் வருவாய் கடந்த ஆண்டின் ரூ.1,849 கோடியில் இருந்து, மதிப்பீட்டு காலாண்டில் 21 சதவீதம் உயா்ந்து, ரூ.2,229 கோடியாக அதிகரித்துள்ளது. இதில் வட்டி வருவாய் மட்டும் 24 சதவீதம் அதிகரித்து, ரூ.1985 கோடியாக உள்ளது.

மதிப்பீட்டு காலாண்டின் முடிவில், வாடிக்கையாளா்களின் வைப்புத்தொகை 21 சதவீதம் உயா்ந்து, ரூ.79,342 கோடியாகவும்; கடன் வழங்கல் 25 சதவீதம் வளா்ச்சி அடைந்து ரூ.67,645 கோடியாகவும் உள்ளன. வங்கியின் மொத்த வணிகம் ஆண்டுக்கு 23 சதவீதம் வளா்ச்சியுடன், ரூ.1,46,987 கோடியை எட்டியது.

மொத்த வாராக்கடன் விகிதம் 1.73 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் விகிதம் 0.61 சதவீதமாகவும் குறைந்து, சொத்துத் தரம் மேம்பட்டுள்ளது. மேலும், வங்கியின் சொத்து மீதான வருவாய் 1.57 சதவீதமாகப் பராமரிக்கப்படுகிறது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.