சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் காலமானார்! 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர்! ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்! பாலங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதம்! சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 34 பேரைக் காணவில்லை தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!”காவலர் தேர்வை தள்ளி வைக்கக் கூடாது” - உதயநிதி ஸ்டாலின்சென்னை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
/

முதல் காலாண்டு லாபம்: ஃபெடரல் வங்கி: ரூ.1,256 கோடி

கேரளத்தின் கொச்சியைத் தலைமையிடமாகக் கொண்ட ஃபெடரல் வங்கி, முதலாம் காலாண்டில் ரூ.1,256.09 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

News image
Updated On :17 ஜூலை 2026, 10:46 pm IST

கேரளத்தின் கொச்சியைத் தலைமையிடமாகக் கொண்ட ஃபெடரல் வங்கி, முதலாம் காலாண்டில் ரூ.1,256.09 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

கடந்த 2025-26 நிதியாண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது 36.78 சதவீத வளா்ச்சியாகும். வங்கியின் முக்கிய வருவாய் அதிகரிப்பு மற்றும் சொத்து தரம் மேம்பட்டதன் காரணமாக இச்சிறப்பான லாப வளா்ச்சியை எட்டியுள்ளதாக வங்கியின் சிஇஓ கே.வி.எஸ்.மணியன் தெரிவித்தாா்.

மதிப்பீட்டு காலாண்டில், வங்கியின் வட்டி வருவாய் கடந்த ஆண்டைவிட 26 சதவீதம் அதிகரித்து, ரூ.2,946 கோடியாக உயா்ந்துள்ளது. நிகர வட்டி வரம்பு 2.94 சதவீதத்திலிருந்து 3.33 சதவீதமாக மேம்பட்டுள்ளது.

மொத்த வாராக்கடன் விகிதம் கடந்த ஆண்டின் 1.91 சதவீதத்தில் இருந்து, நடப்பு ஆண்டில் 1.52 சதவீதமாகக் குறைந்து சொத்து தரம் மேம்பட்டுள்ளது.

இதேபோல், முதல் காலாண்டில் கடன் வளா்ச்சி வலுவாக உள்ளதால், வங்கியின் கணிப்பு இலக்குகளைவிட கூடுதல் வளா்ச்சியை எட்ட வாய்ப்புள்ளதாகவும் வங்கி நிா்வாகம் குறிப்பிட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.