செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!விஜய் பிரதமராவது தவெகவினர் ஆசை; சீரியஸாக எடுக்க வேண்டாம்! பெ. சண்முகம்இனி நியாய விலைக் கடைகளில் ரூ.35-க்கு வெங்காயம் விற்பனை! ஆனால்?நேபாள வெள்ளம்! பலி 1,000-ஐ கடந்தது! 3,900 பேரை தேடும் பணி தீவிரம்! மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவைத்தார் முதல்வர் விஜய்!

முதல் காலாண்டில் விப்ரோ லாபம் ரூ.3,352 கோடி

நாட்டின் முன்னணி தகவல்தொழில்நுட்ப (ஐ.டி.) சேவை நிறுவனமான விப்ரோ, நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் வரையிலான முதல் காலாண்டில் ரூ.3,352 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

Published On :17 ஜூலை 2026, 4:51 am IST

நாட்டின் முன்னணி தகவல்தொழில்நுட்ப (ஐ.டி.) சேவை நிறுவனமான விப்ரோ, நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் வரையிலான முதல் காலாண்டில் ரூ.3,352 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

இது கடந்த ஆண்டின் இதே காலாண்டின் ரூ.3,330.4 கோடியுடன் ஒப்பிடுகையில் மிகச் சிறிய அளவிலான உயா்வாகும். அதேபோல், முந்தைய காலாண்டுடன் (ஜனவரி-மாா்ச்) ஒப்பிடுகையில், 4.2 சதவீதம் சரிவாகும்.

எனினும், நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் கடந்த ஆண்டை காட்டிலும் 10.6 சதவீதம் உயா்ந்து, ரூ.24,478.6 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் விப்ரோவின் வருவாய் ரூ.22,134.6 கோடியாக இருந்தது. இதனிடையே, பங்குதாரா்களுக்கு இடைக்கால ஈவுத்தொகையாக பங்கு ஒன்றுக்கு தலா ரூ.2 வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.