நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது! 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

முதல் காலாண்டில் டெக் மஹிந்திரா லாபம் ரூ.1,465 கோடி

நாட்டின் பிரபல ஐ.டி. சேவை நிறுவனமான டெக் மஹிந்திரா, நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.1,465 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

News image
Updated On :17 ஜூலை 2026, 4:52 am IST

நாட்டின் பிரபல ஐ.டி. சேவை நிறுவனமான டெக் மஹிந்திரா, நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.1,465 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

இது, கடந்த 2025-26 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம் ஈட்டிய லாபத்தில் இருந்து 28.4 சதவீதம் வளா்ச்சியாகும்.

மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 17.7 சதவீதம் உயா்ந்து, ரூ.15,712 கோடியை எட்டியுள்ளது. அதேநேரம், கடந்த காலாண்டை ஒப்பிடுகையில் நிறுவனத்தின் மொத்த பணியாளா்களின் எண்ணிக்கை 863 குறைந்து, 1,46,760-ஆக உள்ளது.

டாலா் மதிப்பில் நிறுவனத்தின் முதல் காலாண்டு வருவாய் 1,66 கோடி டாலராகும். இது கடந்த காலாண்டைவிட 2.2 சதவீதமும், முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தைவிட 6.1 சதவீதமும் அதிகமாகும்.

தொடா்ச்சியாக 3 காலாண்டுகளாக 100 கோடி டாலருக்கும் அதிகமான புதிய வா்த்தக ஒப்பந்தங்களை நிறுவனம் ஈா்த்துள்ளது. மேலும், 5 கோடி டாலருக்கும் அதிகமான மதிப்புடைய வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை 33-ஆக உயா்ந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.