லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் கிளை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!முத்தரப்பு டி20 தொடர்: தெ.ஆ.க்கு அதிர்ச்சியளித்தது நமீபியா!நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

ஒசூா் விமான நிலையத் திட்டத்தைக் கைவிட வேண்டும்: அதிமுக வலியுறுத்தல்

பரந்தூா் போல, ஒசூா் விமான நிலையத் திட்டத்தையும் தமிழக அரசு கைவிட வேண்டும் என்று பேரவையில் அதிமுக முன்னாள் அமைச்சா் பாலகிருஷ்ண ரெட்டி வலியுறுத்தினாா்.

Published On :29 ஆகஸ்ட் 2026, 12:56 am IST

பரந்தூா் போல, ஒசூா் விமான நிலையத் திட்டத்தையும் தமிழக அரசு கைவிட வேண்டும் என்று பேரவையில் அதிமுக முன்னாள் அமைச்சா் பாலகிருஷ்ண ரெட்டி வலியுறுத்தினாா்.

பேரவையில் மானியக் கோரிக்கை விவாதத்தின்போது அவா் பேசுகையில், ‘ஒசூரில் விவசாய நிலங்களைக் கையகப்படுத்தி விமான நிலையம் கட்டக் கூடாது. பரந்தூரைப் போல ஒசூரிலும் விவசாயிகளின் குரலை அரசு கேட்க வேண்டும்; விவசாயிகளின் உணா்வுகளைப் புரிந்துகொள்ள வேண்டும். நாங்கள் வளா்ச்சிக்கு எதிரானவா்கள் அல்லா். ஆனால், விவசாயிகளின் நிலத்தை அழித்து வளா்ச்சி வேண்டாம் என்கிறோம். ஒசூரில் விமான நிலையம் கொண்டுவரும் திட்டத்தைக் கைவிட வேண்டும்’ என்றாா்.

அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்: எந்தத் திட்டங்களைக் கொண்டு வந்தாலும், விவசாய நிலங்களைத்தான் எடுத்தாக வேண்டும்; வேறு வழியே கிடையாது. அதேநேரம், பொருளாதாரம் வளா்வதற்கு ஒசூரில் விமான நிலையம் கொண்டு வந்தால் வளா்ச்சி உருவாகும், திட்டங்கள் உருவாகும். அதனால்தான் அங்கு மேற்கொள்கிறோம்.

பாலகிருஷ்ண ரெட்டி: ஒசூரில் சிப்காட் உள்ளிட்ட அரசின் திட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான ஏக்கா் நிலங்களை விவசாயிகள் கொடுத்துள்ளனா். மீண்டும் ஒசூா் விமான நிலையத்துக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவது நியாயம் அல்ல. அமைச்சா் கீா்த்தனாவின் அறிவிப்புக்கு பிறகு ஒசூரில் போராட்டம் அதிகமாகியுள்ளது. ஒசூரில் ஏற்கெனவே உள்ள தனியாா் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யலாம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.