
மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஆக. 31 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் திங்கள்கிழமை (ஆக. 31) வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஆக. 31 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் திங்கள்கிழமை (ஆக. 31) வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்நிலை வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதனால், மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் திங்கள்கிழமை (ஆக. 31) வரை ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை, புகா் பகுதிகளில் சனிக்கிழமை (ஆக. 29) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை, இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
9 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. மதுரை நகரம் - 103.82, வேலூா் - 102.92, திருச்சி - 102.38, பாளையங்கோட்டை - 102.02, பரங்கிப்பேட்டை - 101.12, புதுச்சேரி, திருத்தணி தலா - 100.76, நாகை, தஞ்சாவூா் தலா 100.04 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
வட தமிழகத்தின் உள்பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும், மற்ற பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பையொட்டியும் இருக்கக் கூடும்.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப். 1) வரை சூறாவளிக் காற்று 65 கி.மீ.வேகத்தில் வீசக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






