பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

திமுகவில் மாவட்டங்கள் 77-லிருந்து 110 ஆக அதிகரிப்பு! சென்னையில் 10 மாவட்டங்கள்!

திமுகவில் 77-லிருந்து 110 மாவட்டங்களாக அதிகரிக்கப்பட்டிருப்பது பற்றி...

MK Stalin

மு.க. ஸ்டாலின் - DMK

Published On :28 ஆகஸ்ட் 2026, 12:48 pm IST

திமுகவில் 77 மாவட்டங்களிலிருந்து 110 மாவட்டங்களாக அதிகரித்து அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.

சென்னை மட்டும் 10 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், அதிக மக்கள்தொகை கொண்ட சோழிங்கநல்லூரை மட்டும் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மு.க. ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

“கடந்த 22.8.2026 அன்று நடைபெற்ற திமுக தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிர்வாகச் சீரமைப்புக்குத் தேவையான மிக முக்கியமான முடிவுகளைத் தீர்மானங்களாக நிறைவேற்றி இருக்கிறோம்.

கட்சித் தொடங்கப்பட்ட நாள் முதல், இதுவரையில் 15 முறை கட்சி அமைப்புரீதியாகத் தேர்தல் நடத்தி, நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்துள்ளோம். இதன் தொடர்ச்சியாக 16-ஆவது கட்சி அமைப்புத் தேர்தலை நடத்திடவும் – பல்வேறு அமைப்புரீதியாக நிர்வாக மாற்றங்கள் மேற்கொள்ளப்படவும் பல தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில் மிக முக்கியமானது மாவட்டங்கள் குறித்த தீர்மானமாகும்.

அதில், தற்போதுள்ள கட்சியின் மாவட்டங்களின் எண்ணிக்கையை 77-இலிருந்து 110-ஆக அதிகரித்து, எந்தெந்தத் தொகுதிகள் எந்தெந்த மாவட்டங்களில் இடம்பெற வேண்டும் என்பதை வரையறுப்பதற்கான அதிகாரம் கட்சித் தலைவரான எனக்கு வழங்கப்பட்டது.

இதனையடுத்து, கட்சி மறுசீரமைப்புக் குழு வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில், கட்சி முன்னணியினருடன் கலந்தாலோசித்து, தமிழ்நாட்டில் உள்ள தொகுதிகளை 110 மாவட்டங்களாகப் பகுத்து அறிவிக்கிறேன். அதில், அதிகமான மக்கள் தொகை இருப்பதன் காரணமாகச் சோழிங்கநல்லூர் தொகுதி மட்டும் தனி மாவட்டமாக அறிவிக்கப்படுகிறது.

அறிவிக்கப்பட்டுள்ள இந்த 110 மாவட்டங்களில் தற்போதுள்ள மாவட்டச் செயலாளர்கள், தலைமையால் அனுப்பப்படும் பிரதிநிதியின் முன்னிலையில் மாவட்டச் செயற்குழுவைக் கூட்டி, மேற்குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டங்களின் அடிப்படையில், நகர – ஒன்றிய – பகுதி – பேரூர் – வட்ட – கிளை அமைப்புகளைப் பிரிப்பதற்கான பரிந்துரைகளை 15 நாட்களுக்குள் வழங்கிட வேண்டும் என்றும், தலைமைச் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையிலும், கட்சி மறுசீரமைப்புக்குழு மூலம் வழங்கப்படும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, கட்சி அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

PDF
110 மாவட்டங்களின் விவரங்கள்
பார்க்க

Summary

DMK expands from 77 to 110 districts! 10 districts in Chennai!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.