கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

திமுகவை மீண்டும் வெற்றிக்கு அழைத்துச் செல்வேன்! மு.க. ஸ்டாலின் சூளுரை

திமுகவின் தலைவராக 9 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருப்பது குறித்து மு.க. ஸ்டாலின் பதிவு...

MK Stalin

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்

Published On :

திமுகவை மீண்டும் வெற்றிக்கு அழைத்துச் செல்வேன் என்று அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

திமுகவை மாவட்ட அளவில் மறுசீரமைக்கும் வகையில் 77 ஆக இருந்த கட்சியின் மாவட்டங்களை 110 ஆக உயர்த்தி மு.க. ஸ்டாலின் இன்று அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த நிலையில், திமுக தலைவராக பொறுப்பேற்று 9-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருப்பது தொடர்பாக மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”2018-ஆம் ஆண்டு இதே நாளில், தி.மு.க. தலைவராக தொண்டர்களால் நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.

அப்போது, “நாம் யார்? நம் கொள்கைகள் என்ன? நமக்குள் இருக்கும் குறைகள் என்ன? காலத்திற்கேற்ப நாம் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் எவை?

காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளாத விலங்கோ, இனமோ இந்த மண்ணில் நீடித்திருப்பதில்லை. மாற்றங்கள் நம்மில் இருந்து தொடங்கட்டும்” எனப் பேசியிருந்தேன்.

கட்சித் தலைவராக 9-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாளில், அப்படி ஒரு மாற்றத்தை, மறுசீரமைப்பை அறிவித்துள்ளேன். கட்சியின் நலனை முன்னிறுத்திச் செய்யப்பட்டிருக்கும் இந்த மறுசீரமைப்புக்குக் கட்சியினர் அனைவரும் துணைநிற்க வேண்டும்.

உங்களின் துணையோடு மீண்டும் நம் கட்சியை வெற்றிக்கு அழைத்துச் செல்வேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

I will lead the DMK to victory again! M.K. Stalin vows.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.