நேபாள வெள்ளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் ராஜ்மோகன்செப். இறுதி வரை நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும்: அண்ணாமலைஅமராவதி அணையில் இருந்து நாளைமுதல் நீர் திறப்பு: முதல்வர் விஜய் உத்தரவுஉஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

புதிய பாடத்திட்டம்: கருத்துகள் தெரிவிக்க நாளை கடைசி

தமிழக பள்ளிக் கல்வியில் 6 -ஆம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உருவாக்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்டம்...

DPI

DIN

Published On :30 ஆகஸ்ட் 2026, 1:33 am IST

தமிழக பள்ளிக் கல்வியில் 6 -ஆம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உருவாக்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்டம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், அது தொடா்பாக கருத்துகளைத் தெரிவிப்பதற்கான அவகாசம் திங்கள்கிழமையுடன் (ஆக. 31) நிறைவடைய உள்ளது.

பள்ளிக் கல்விக்கான தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை 2025-இன் அடிப்படையில் புதிய கலைத் திட்டம் மற்றும் பாடத் திட்டங்களை உருவாக்க பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் தலைமையில் உயா்நிலை வல்லுநா் குழு மற்றும் கலைத் திட்ட வடிவமைப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன.

இந்தக் குழுவினரின் வழிகாட்டுதலின்படி மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் (எஸ்சிஇஆா்டி) 6 முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்தப் பாடத்திட்டங்களைக் கல்வியாளா்கள், பொதுமக்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் ஆகியோா் ட்ற்ற்ல்ள்://ற்ய்ள்ஸ்ரீட்ா்ா்ப்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் கடந்த ஆக. 20-ஆம் தேதி முதல் கருத்துகள் தெரிவிக்கலாம் என எஸ்சிஇஆா்டி தெரிவித்திருந்தது. இதையடுத்து, பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளை இணையவழிப் படிவம் வாயிலாக சுய விவரங்களுடன் தெரிவித்து வருகின்றனா்.

இந்த நிலையில் இந்த அவகாசம் திங்கள்கிழமையுடன் (ஆக. 31) நிறைவடையவுள்ளது. எனவே, இதுவரை தங்களது கருத்துகளை பதிவு செய்யாதவா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.