விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

திண்டுக்கல் அருகே விபத்தில் 4 சிறார்கள் பலி: முதல்வர் இரங்கல், நிவாரணம் அறிவிப்பு

திண்டுக்கல் அருகே வாகன விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிவாரணம் அறிவித்துள்ளது குறித்து...

Chief Minister Vijay

முதல்வர் ச. ஜோசப் விஜய் - கோப்புப்படம்

Published On :30 ஆகஸ்ட் 2026, 11:02 pm IST

திண்டுக்கல் வாகன விபத்தில் பலியான சிறார்களுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் விஜய், அவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையையும் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், கொல்லப்பட்டி கிராமத்தில் இன்று (ஆக 30) சாலையின் ஓரத்தில் அமர்ந்திருந்த புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அஞ்சலையம்மாள் (60), அய்யலூர் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் குழந்தைகள் யோகவர்ஷினி (11), அனன்யா (6), ஜெகதீஷ் குழந்தை தனுஸ்ரீ (7) மற்றும் சின்னத்தம்பி குழந்தை போஸ்கிரண் (6) ஆகியோர் மகேந்திரா தோஸ்த் வாகனம் எதிர்பாராத விதமாக மோதிய விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் நான்கு குழந்தைகளும் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையுமடைந்தேன்.

இந்த விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அஞ்சலையம்மாளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.

இந்த விபத்தில் உயிரிழந்த நான்கு குழந்தைகளின் பெற்றோர்களுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ரூ.1 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

Summary

4 children killed in accident Dindigul Kollapatti Road accident: CM condolences and Relief

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.