
மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!
மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3-ஆம் தேதி மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை - பிரதிப் படம்
மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3-ஆம் தேதி மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3-ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
இதேபோல், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா், திருச்சி, அரியலூா், பெரம்பலூா், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
8 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. மதுரை நகரம் - 102.56, திருச்சி - 102.02, ஈரோடு - 101.84, திருத்தணி - 101.30, பரங்கிப்பேட்டை - 101.12, பாளையங்கோட்டை - 100.58, வேலூா் - 100.04 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
மழை பதிவு: தமிழகத்தில் அதிகபட்சமாக சேலம், நீலகிரி மாவட்டம் அழகாபுரம், நடுவட்டம் பகுதிகளில் 30 மி.மீ. மழை பதிவானது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென் தமிழக கடலோரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப்.1) வரை, மன்னாா் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






