விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

திண்டுக்கல்: வேன் மோதி 4 சிறார்கள் பலி!

திண்டுக்கல்லில் நிகழ்ந்த விபத்தில் 4 சிறார்கள் பலியானது பற்றி....

Dindigul: 4 Minors Killed as Van Hits Them

பிரதிப் படம்

Published On :30 ஆகஸ்ட் 2026, 5:17 pm IST

வடமதுரை அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெற்றோருடன் சாலையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர், சிறுமியர் 4 பேர் வேன் மோதிய விபத்தில் பலியாகினர்.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை கொல்லப்பட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரது மனைவி அஞ்சம்மாள்(60). கொல்லப்பட்டி சமத்துவபுரம், கணவாய் மேடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது அவரது உறவினர்களின் குழந்தைகளான நாகராஜ் என்பவரது மகள்கள் யோகவர்ஷினி(11), அனன்யா(6), ஜெகதீசன் என்பவரது மகள் தனுஸ்ரீ(5), சின்னத்தம்பி என்பவரது மகன் மோசிகரன்(6) உள்ளிட்டோர் சாலையோரமாக விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக சென்ற பால் வேன், சிறுவர், சிறுமிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த 4 பேரும் நிகழ்விடத்திலேயே பலியாகினர். இதனைப் பார்த்த அஞ்சம்மாள், அதிர்ச்சியில் மயக்கமடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வடமதுரை போலீஸார், சிறுவர், சிறுமிகளின் உடல்களை மீட்டு கூறாய்வுகாக திண்டுக்கல் அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொல்லப்பட்டி பகுதியில் நிகழ்ந்த இந்த கோர விபத்து சிறுவர், சிறுமியர்களின் உறவினர் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Summary

The death of four minors in a van accident in Dindigul has caused widespread grief.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.