
சட்டப்பேரவையின் சூப்பர் ஸ்டார்! மனைவியைப் பாராட்டிய அன்புமணி
எம்எல்ஏ சௌமியாவை சட்டப்பேரவையின் சூப்பர் ஸ்டார் என அன்புமணி பாராட்டியது குறித்து...
அன்புமணி | சௌமியா - கோப்புப் படம்
பள்ளிக்கரணையை சதுப்பு நிலமாக அறிவிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணியும் எம்எல்ஏ சௌமியா அன்புமணியும் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைப் பாதுகாக்கக்கோரி பிரசாரத்தில் அன்புமணி பேசியதாவது, "திமுகவும் அதிமுகவும் ஊழல் செய்வதற்காகவே பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்காமல் துரோகம் செய்துள்ளனர். இரு திராவிட கட்சிகளும் ஊழல் செய்வதற்காக பள்ளிக்கரணையை சதுப்பு நிலமாக அறிவிக்கை செய்யவில்லை.
தமிழ்நாட்டில் இயற்கையைப் பாதுகாக்க ஒரு அரசுகூட இல்லை. இதுவே உங்களின் சொந்த நிலமாக இருந்திருந்தால், இப்படி விட்டிருப்பீர்களா? அரசு நிலம் என்ற அலட்சியம்தான்.
100 ஆண்டுகளுக்கு முன்னர் 15,000 ஏக்கராக இருந்த சதுப்பு நிலம், தற்போது 2,500 ஏக்கராக சுருங்கி விட்டது.
மேக்கேதாட்டு அணையைக் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதியளித்து விட்டதாக கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தொடர்ந்து பொய் கூறி வருகிறார். மேக்கேதாட்டு விவகாரத்தில் தமிழக அரசு அமைதியாக இருப்பது நல்லதல்ல. அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும்" என்று தெரிவித்தார்.
Summary
The Superstar of the Legislative Assembly: Anbumani praises his wife Sowmiya Anbumani
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






