
தண்ணீர் தொட்டியில் பெண் சடலம்! சேலத்தில் பரபரப்பு
தண்ணீர் தொட்டியில் பெண் சடலம் துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட சம்பவத்தால் சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெண் கொலை - பிரதி படம் - ஏஎன்ஐ
சேலத்தில் வீட்டின் தண்ணீர் தொட்டியில் பெண்ணின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு மூட்டை கட்டி வீசப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம் அரிசிபாளையம் குணபல ராமசாமி தெருவில் வாடகை வீட்டின் மொட்டை மாடியில் உள்ள சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டியில் பெண் ஒருவரின் சடலம் துண்டு துண்டாக வெட்டப்பட்டு, இரண்டு மூட்டைகளில் கட்டி வீசப்பட்ட நிலையில் உடல் மீட்கப்பட்டது.
துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து வீட்டில் வசிக்கும் பூசாரி ரமேஷ் அளித்த புகாரின் பேரில் பள்ளப்பட்டி போலீசார், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தண்ணீர் தொட்டிக்குள் ஏழு துண்டுகளாக பெண்ணின் உடலை வெட்டி அதை மூன்று மூட்டைகளாக கட்டி வீசப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட பெண் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Summary
Woman's body found in water tank! Sensation in Salem.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





