234 தொகுதிகளிலும் விஜய்யின் முகம் மட்டுமே!
தேர்தலில் 234 தொகுதிகளிலும் தவெக தலைவர் விஜய்யின் முகம் மட்டுமே போதும் என்று கட்சிப் பொதுச் செயலாளர் அருண் ராஜ் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளருடன் தவெகவின் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண் ராஜ் பேசுகையில், "தலைவர் விஜய் கூறியதுபோல, எந்தவொரு ஊழலும் அல்லது பிற குற்றச்சாட்டுகளும் இல்லாத நல்லாட்சியை வழங்கவே நாங்கள் இங்கு வந்துள்ளோம். கூட்டணியைப் பொருத்தவரை, நட்புக் கட்சிகளுடனோ அல்லது தனியாகவோ 243 தொகுதிகளிலும் போட்டியிட தவெக தயாராக உள்ளது.
தமிழ்நாட்டு மக்கள், மாற்றத்துக்காகவே காத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் நம்பிக்கை எல்லாம், தவெக மீதுதான்.
திமுகவை தோற்கடித்து, மக்களுக்கு நல்லாட்சியை வழங்கக்கூடிய ஒரே கட்சி தவெக மட்டுமே.
243 தொகுதிகளிலும் தலைவர் விஜய்யின் முகமே, வாக்காளர்களை இயக்கும் சக்தியாக இருக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது. இதுதவிர, வேட்பாளர்களின் நற்சான்றிதழ்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
மேலும், நிறைய பணம் அல்லது பலம் வாய்ந்தவர்களுக்குப் பின்னால் மக்கள் செல்ல மாட்டார்கள் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
ஒரு புதிய கட்சியாக, திமுகவை தோற்கடிப்போம்" என்று தெரிவித்தார்.
TVK is the only party capable of defeating this DMK, says General Secretary Arun Raj
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

