பல வழிகளில் தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது: துணை முதல்வர் உதயநிதி

பல வழிகளில் தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.
Updated on
1 min read

பல வழிகளில் தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்துகொண்டு அவர் உரையாற்றுகையில், இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவித்த ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு என்று ஒரு திட்டமும் இல்லை. பழனிமாணிக்கம் ஒன்றிய நிதித்துறை இணையமைச்சராகப் பணியாற்றியவர். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகப் பல திட்டங்களை கொண்டு வந்தவர். ஆனால் இப்போது நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் இருக்கிறார். நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்று பெருமையாக சொல்லிக்கொள்வார். ஆனால் தமிழ்நாட்டுக்கு என்று ஒரு திட்டம் கூட கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை. தமிழ்நாடு என்ற வார்த்தையே சென்ற வருட பட்ஜெட்டில் கிடையாது.

இப்படி ஒன்றிய அரசு தமிழ்நாட்டை பல வழிகளில் வஞ்சித்து வருகிறது. இதையெல்லாம் கண்டிக்க வேண்டிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை படித்து முடிப்பதற்கு முன்பாகவே, மிகச்சிறந்த பட்ஜெட் என்று சொல்கிறார். முரட்டு பக்தர்களை கேள்வி பட்டிருப்பீர்கள். முரட்டு அடிமையைப் பார்த்திருக்கிறீர்களா? பா.ஜ.க-வின் முரட்டு அடிமையாக இன்று எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார்.

பழைய அடிமைகள், புதிய அடிமைகள் என்று எத்தனை அடிமைகள் வந்தாலும் நிச்சயம் இந்த சட்டமன்ற தேர்தலில் குறைந்தது 200 தொகுதிகளில் நம் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிப் பெற்று, நம் தலைவர் மீண்டும் முதலமைச்சராக அமரப்போவது உறுதி. அதற்கான தொடக்கமாக இந்த தஞ்சை மாவட்டம் நிச்சயமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. திமுக ஏழாவது முறையாக ஆட்சி அமைக்க வேண்டுமென்றால், நம் தலைவர் இரண்டாவது முறையாக முதலமைச்சர் நாற்காலியில் அமர வேண்டுமென்றால், அடுத்த இரண்டு மாதங்களுக்கு நம் கட்சி நிர்வாகிகள் களத்தில் இறங்கி, கடுமையாக உழைக்க வேண்டும்.

இந்த நேரத்தில் மணமக்களுக்கு ஒரு சிறிய கோரிக்கை. இல்வாழ்வில் நீங்கள் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு வாழ வேண்டும். சுயமரியாதையோடும், பகுத்தறிவோடும் உங்களின் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள். விட்டுக்கொடுக்க வேண்டிய விஷயங்களுக்கு விட்டுக்கொடுங்கள். ஆனால், உரிமையைப் பெறுவதற்கு, உறுதியோடு இருந்து உரிமையை பெற்றுக்கொள்ள வேண்டும். உங்களுக்கு பிறக்கின்ற குழந்தை ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி, பெண் குழந்தையாக இருந்தாலும் சரி அழகான தமிழ்ப் பெயரைச் சூட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

Summary

Deputy Chief Minister Udhayanidhi Stalin has stated that the Central Government is deceiving Tamil Nadu in many ways.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.
தேசியவாத காங்கிரஸ் தலைவராக சுநேத்ரா பவார் பொறுப்பேற்க வேண்டும்: புஜ்பால்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com