அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நாளை சிம்பு வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்: சி.வி. சண்முகம் பேச்சு

தவெகவை அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் விமர்சித்துள்ளது பற்றி...

News image
சி.வி. சண்முகம் (கோப்புப்படம்)
Updated On :11 பிப்ரவரி 2026, 11:29 am

இணையதளச் செய்திப் பிரிவு

அரசியலுக்கு யார் வந்தாலும் போனாலும் திமுகதான் நமக்கு ஒரே எதிரி என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பேசியுள்ளார்.

திண்டிவனத்தில் அதிமுக நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசிய அவர்,

"அரசியலுக்கு யார் வந்தாலும் போனாலும் சரி, யாரைப்பற்றியும் நமக்கு கவலையில்லை. அன்றும் இன்றும் என்றும் நமக்கு ஒரே எதிரி திமுகதான். வரும் தேர்தலில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும்தான் போட்டியே.

மூப்பனார் வந்தார், வைகோ வந்தார், விஜயகாந்த் வந்தார், போய்விட்டார்கள். திமுகவிடம் இன்று பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறாரே கமல்ஹாசன், அவர் வந்தார், உடனே மாற்று சக்தி வந்துவிட்டது, தமிழ்நாட்டுக்கே ஒளி கொடுத்துவிட்டார் என்று பேசினார்கள். டார்ச் லைட் கொண்டு டிவியை அடித்து உடைத்தார். அவரும் போய்விட்டார்.

இப்போது ஒருவர்(விஜய்) வந்திருக்கிறார். சினிமா தியேட்டரில் வேண்டுமானால் விசில் அடிக்கலாம். பேருந்தை நிறுத்த வேண்டுமானால் விசில் அடிக்கலாம். மக்கள் அதிமுகவுக்கு வாக்களிப்பதை யாராலும் நிறுத்த முடியாது.

யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், நாளை சிம்பு வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒன்று முளைத்துக்கொண்டுதான் இருக்கும். அதனால் அதைப்பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை" என்று பேசியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.