மகளிர் உரிமைத் தொகையாக ரூ. 5,000 வழங்கியதற்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து திமுக மகளிரணியினர் நன்றி தெரிவித்தனர்.
தமிழகத்தில் விரைவில் பேரவைத் தேர்தல் அறிவிக்கப்படவுள்ளதையொட்டி மகளிர் உரிமைத் தொகை பெறும் மகளிரின் வங்கிக் கணக்குகளில் இம்மாதம் ரூ. 5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரியுடன் மார்ச், ஏப்ரல் மாதத்துக்கும் சேர்த்து ரூ. 3,000 மற்றும் கோடைக்கால சிறப்புத் தொகுப்பாக ரூ. 2,000 வரவு வைக்கப்பட்டதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தேர்தல் அறிவிக்கப்பட்டால் மகளிர் உரிமைத் தொகை வழங்க முடியாது என்பதால் முன்கூட்டியே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், வரும் தேர்தலிலும் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்த பிறகு, மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்புக்கு பெண்கள் மத்தியில நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆனால், எதிர்க்கட்சியினர் இதுபற்றி விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் திமுக மகளிரணியினர் உள்ளிட்ட பெண்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர். அவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடினார்.
மகளிருக்கு ரூ. 5,000 வழங்கி அவர்களுக்கு திமுக அரசு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
Summary
DMK women wing thanked MK stalin for magalir urimai thogai
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









