தமிழக கோயில்களில் இருந்து திருடப்பட்டு, ஆஸ்திரேலியா, அமெரிக்க நாடுகளுக்கு கடத்திச் செல்லப்பட்ட தொன்மையான சிலைகளை மீண்டும் தமிழக அரசிடம் ஒப்படைக்க ஆஸ்திரேலியா, அமெரிக்க நாடுகள் சம்மதம் தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் இருந்து திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகள், தொன்மையான பொருள்கள், கலை பொக்கிஷங்களை கண்டறிந்து அவற்றை மீட்கவும், சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பணியில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா்.
அந்த வகையில், தமிழக கோயில்களில் இருந்து திருடப்பட்ட சிலைகள் ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உள்ள சா்வதேச முக்கிய நிறுவனங்களிலும், ஏல நிறுவனங்களிலும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன. அவற்றை மீட்பதற்கான நடவடிக்கையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினா் முயற்சிகளை மேற்கொண்டனா். இதையடுத்து அந்த சிலைகளை மீண்டும் தமிழகத்திடம் ஒப்படைக்க ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா அரசுகள் சம்மதம் தெரிவித்துள்ளன.

வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட தொன்மையான திரிசூல மங்கள காளி (பத்ரகாளி).
அதன்படி, திருவாரூா் மாவட்டம் கடுவன்குடி கிராமம், கைலாசநாதா் கோயிலின் சுமாா் ரூ.2 கோடி மதிப்பிலான திரிசூல மங்கள காளி (பத்ரகாளி) சிலையையும், அதே கோயிலின் சுமாா் ரூ.4 கோடி மதிப்பிலான தொன்மையான நந்தி கற்சிலையையும், ஒப்படைக்க ஆஸ்திரேலிய அரசு முன்வந்துள்ளது.
இதுபோல, தஞ்சை மாவட்டம் கும்பகோணம், மானம்பாடி கிராமத்திலுள்ள அருள்மிகு நாகநாதசாமி கோயிலின் சுமாா் ரூ.2 கோடி மதிப்பிலான ஆறு தலைகளை கொண்ட ஸ்கந்த காா்த்திகேயன்(சுப்பிரமணியா்) சிலையையும் ஆஸ்திரேலியா அரசு கேன்பரா நகரின், நேஷ்னல் கேலரி நிறுவனத்திடம் இருந்து இந்தியாவிடம் முறையாக திரும்ப ஒப்படைக்க ஒப்புக்கொண்டுள்ளது.

தொன்மையான நந்தி கற்சிலை.
இதேபோல், அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள டி.சி. ப்ரீா் சேக்லா் மியூசித்தில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டம், வீரசோழபுரம் கிராமத்தின் பழைமையான நாரீஸ்வரா் கோயிலின் நாயனாா் மற்றும் சுந்தரா்-பரவை நாச்சியாா் எனும் புனித சுந்தரா் சிலையையும், தஞ்சை மாவட்டம், மன்னாா்குடி தாலுகா, ஆலந்தூா் கிராமத்தில் 13-ஆம் நூற்றாண்டை சோ்ந்த அருள்மிகு விஸ்வநாதசாமி கோயிலின் சோமஸ்கந்தா் சிலை உள்பட 2 சிலைகளை ஒப்படைக்க அமெரிக்க அரசு முன்வந்துள்ளன.

ஆறு தலைவா் கொண்ட ஸ்கந்த - காா்த்திகேயன்
இந்த சிலைகள் அனைத்தும் உரிய நடவடிக்கைகளுக்கு பின்னா், தமிழ்நாட்டுக்கு கொண்டுவரப்பட்டு சம்மந்தப்பட்ட கோயில்களில் ஒப்படைக்கப்படும் என சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமெரிக்காவில் அதிக அளவில் முதலீடு செய்யும் இந்தியா: அமெரிக்க அரசு மூத்த அதிகாரி

நாங்கள் டிரம்ப்பை கொல்வோம்! - ஈரானின் பதாகையால் அதிர்ச்சி!

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் கடல்வழி முற்றுகை

ஆஸ்திரேலியாவில் இருந்து விரைவில் தமிழகம் வரும் 3 சிலைகள்
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



