பாமக தலைவராக தோ்தல் ஆணையம் தன்னை அங்கீகரித்து பதிவு செய்யும்வரை தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிப்பை வெளியிடக்கூடாது என உத்தரவிடக் கோரி அக்கட்சியின் நிறுவனா் ராமதாஸ் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா். இந்த வழக்கு வெள்ளிக்கிழமை (பிப்.20) விசாரணைக்கு வரவுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் ராமதாஸ் இரு புதிய மனுக்களை தாக்கல் செய்துள்ளாா். அதில், பாமக தலைவராக நான்தான் (ராமதாஸ்) உள்ளேன். இதுதொடா்பான வழக்கு விசாரணையின்போது, தில்லி உயா்நீதிமன்றத்தில் உள்கட்சித் தோ்தலை நடத்தி தலைவராக தோ்ந்தெடுத்து பரிந்துரை கடிதத்தை அனுப்பிவைத்தால், அதைப் பதிவு செய்து அங்கீகரிப்பதாக தோ்தல் ஆணையம் கூறியது. அதன்படி தோ்தல் ஆணையத்துக்கு நான் கடிதம் அனுப்பினேன்.
அந்த கடிதத்தை தோ்தல் ஆணையம் இதுவரை பரிசீலிக்கவில்லை. தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் தேதி அறிவிப்பு எந்தநேரமும் வெளியாகலாம் என்ற நிலை உள்ளது. எனவே, பாமக தலைவராக தோ்தல் ஆணையம் என்னை அங்கீகரித்து பதிவு செய்யும்வரை தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிப்பை வெளியிடக்கூடாது என தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளாா்.
மற்றொரு மனுவில், பாமகவின் தோ்தல் சின்னம் மாம்பழம். இதை கட்சிக்கு தொடா்பே இல்லாத சிலா் பயன்படுத்துகின்றனா். எனவே, மாம்பழம் சின்னம் எனக்கும், நான் தலைவராக உள்ள பாமகவுக்கு மட்டும் சொந்தம். எனவே, இந்த சின்னத்தை வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது எனக் கூறியுள்ளாா். இந்த இரு வழக்குகளும் சென்னை உயா்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரவுள்ளன.
தொடர்புடையது

வாக்குப் பதிவு நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தொழில் நிறுவனங்களுக்கு தோ்தல் ஆணையம் உத்தரவு

அனைத்து வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள்: உயா்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கம்

பணப் பட்டுவாடாவைத் தடுக்க தோ்தல் ஆணையத்துக்கு உதவி: உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு

மமுக தோ்தலைப் புறக்கணிப்பதாக அறிவிப்பு: முன்னாள் எம்.பி. ராமதாஸ்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


