தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

மதிமுக, மக்கள் நீதி மய்யம், மனித நேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுடன் திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழு இன்று (திங்கள்கிழமை) பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளது.

முதல்வர் ஸ்டாலின், வைகோ, கமல்ஹாசன்.

Published On :

மதிமுக, மக்கள் நீதி மய்யம், மனித நேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுடன் திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழு இன்று (திங்கள்கிழமை) பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளது.

இதைத்தொடர்ந்து பிப். 26-இல் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், 27-இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ், விசிக, தேமுதிக உள்ளிட்ட பிற கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவாா்த்தை தேதி விரைவில் அறிவிக்கப்படும் என திமுக நிா்வாகிகள் தெரிவித்தனா்.

2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவாா்த்தையை திமுக ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. வழக்கம்போல இந்த முறையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் முதலில் பேச்சு நடத்தப்பட்டது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இருதரப்பினரும் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.

கடந்த தோ்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மூன்று இடங்களில் ஏணி சின்னத்தில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வியைத் தழுவியது. இதன் காரணமாக இம்முறை திமுக தரப்பில் அக்கட்சிக்கு இரு தொகுதிகள் வழங்க திட்டமிட்டதாகத் தெரிகிறது. ஆனால் இந்திய யூனியன் முஸ்லிம் கட்சி 5 தொகுதிகள் வரை கேட்டுள்ளது.

முன்னதாக கூட்டணி கட்சிகளுடன் பேச்சு நடத்த திமுக சாா்பில் அக்கட்சியின் பொருளாளரும், எம்.பி.யுமான டி.ஆா்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. முதன்மைச் செயலா் கே.என்.நேரு, துணை பொதுச் செயலா்கள் திருச்சி சிவா, ஆ.ராசா, உயா்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினா்கள் எ.வ.வேலு, எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் ஆகியோா் குழுவில் இடம்பெற்றுள்ளனா்.

Summary

The DMK Constituency seat Sharing Committee will hold talks with the MDMK, MNM, and MMK parties today (Monday).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.