தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

வேலூரில் விஜய் அளித்த வாக்குறுதிகள் பற்றி...

விஜய்

Published On :

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியில் குழந்தைகள் பாதுகாப்பில் நம்பர் 1 ஆட்சியாக இருக்கும் என்று விஜய் தெரிவித்துள்ளார்.

வேலூரில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அக்கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார்.

இந்த கூட்டத்தில் தவெக ஆட்சியில் என்னவெல்லாம் செய்யப் போகிறோம் என்று விஜய் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டவை:

  1. பெண் குழந்தைகள், ஆண் குழந்தைகள் பாதுகாப்பில் நமது ஆட்சி நம்பர் 1 ஆக இருக்கும்.

  2. அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் முதல் தரத்தில் இருக்கும்.

  3. போட்டித் தேர்வுகளை சந்திக்கும் வகையில் அரசுப் பள்ளிகளின் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும்.

  4. உயர்நிலை பள்ளி பாடத்திட்டங்களில் அடிப்படை அரசியல் சாசன சட்டம் சேர்க்கப்படும்.

  5. மாநில, மத்திய அரசு அலுவலகங்களை அணுகும் வகையில் தேர்வுகள் அற்ற செயல்முறை பாடத்திட்டங்கள் கற்பிக்கப்படும்.

  6. நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் கல்லூரி சேர்க்கை குறித்து மாணவர்களுக்கு புரிதல் உண்டாக்கப்படும்.

  7. அரசுப் பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு சுத்தமான கதவு பொருத்தப்பட்ட கழிப்பறைகள் உறுதி செய்யப்படும்.

  8. போதைப் பொருள்கள் இல்லாத தமிழகம் உருவாக்கப்படும்.

  9. மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களில் சரிபாதி பெண்கள் இருக்கும் வகையில் மாற்றப்படும்.

  10. மலை கிராமங்களில் பிரசவம் பார்க்கும் வகையில் அரசு சுகாதார மையங்கள் கொண்டுவரப்படும்.

  11. அனைத்து மலை கிராமங்களிலும் பேருந்து போக்குவரத்து என்ற நிலை உருவாக்கப்படும்.

  12. ஆட்டோ, லாரி ஓட்டுநர்கள் அவர்களின் குடும்பங்களுக்காக நல வாரியம் அமைக்கப்படும்.

  13. தென் தமிழகம் உள்பட தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள் அமைக்க கவனம் செலுத்தப்படும்.

  14. விவசாயிகள், மீனவர்கள் மற்றும் நெசவாளர்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்கான திட்டம் காலத்திற்கேற்ப உருவாக்கப்படும்.

Summary

If TVK government is formed.... Vijay's promises!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.