சென்னையில் புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணிக்குச் செல்வோர் கடுமையாக அவதிக்கு ஆளாகியுள்ளதாக திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கூறியுள்ளார்.
தென்னக ரயில்வே இதற்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
"நாள்தோறும் லட்சக்கணக்கானவர்கள் பயன்படுத்தும் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் கடந்த சில நாள்களாக பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு வருவதும், அதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாவதும் வேதனையளிக்கிறது.
ஏற்கனவே 40 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இன்றும் 49 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது, அன்றாடம் பணிக்குச் செல்வோர் தொடங்கி பள்ளி, கல்லூரி மாணவர்கள் வரை கடும் மனவுளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.
குறிப்பாக வரும் வாரங்களில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கவுள்ள நிலையில், தென்னக ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் இப்பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார் .
புறநகர் ரயில்கள் ரத்து
சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நடைமேடை 10 மற்றும் 11-ல் கடந்த 20 ஆம் தேதி முதல் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஏப்ரல் 5 வரை 45 நாள்களுக்கு புறநகர் ரயில்கள் நடைமேடை 5 மற்றும் 6-ல் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்த 204 மின்சார ரயில் சேவைகளை 164 ஆகக் குறைப்பதாக அறிவிக்கப்பட்டு, அதன்படி கடந்த 4 நாள்களாக இயக்கப்பட்டு வந்தன.
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் மேலும் 49 ரயில் சேவைகளை இன்று முதல் குறைப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை புறநகர்ப் பகுதிகளில் இருந்து நாள்தோறும் பணிக்குச் சென்று திரும்பும் லட்சக்கணக்கானோர் கடும் சிரமத்துக்குள்ளாகினர். தேர்வு காலத்தில் மாணவர்களும் நேரத்துக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது.
Summary
Chennai suburban trains cancelled; Railways should act fast to get solution: Kanimozhi
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!

ஏப்ரல் 5 முதல் சென்னை புறநகர் ரயில் சேவை சீராகும்!

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: மார்ச் 2-க்குள் தீர்வு என தெற்கு ரயில்வே தகவல்!

எழும்பூா் - சேத்துப்பட்டு இடையே ரயில்கள் தாமதம்: கூடுதலாக சிறப்புப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


