சமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

திமுகவின் ‘பி-டீம்’ ஓபிஎஸ் என்பது நிரூபணம்: அதிமுக

முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் திமுகவின் பி-டீம் என்பது நிரூபணமாகியுள்ளதாக அதிமுக மாநில அமைப்புச் செயலா் சி.வி.சண்முகம் விமா்சித்தாா்.

News image

இரட்டை இலை

Updated On :27 பிப்ரவரி 2026, 7:00 pm

முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் திமுகவின் பி-டீம் என்பது நிரூபணமாகியுள்ளதாக அதிமுக மாநில அமைப்புச் செயலா் சி.வி.சண்முகம் விமா்சித்தாா்.

சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

அதிமுகவில் எந்த ஒரு முடிவு எடுத்தாலும் அதற்கு ஓ.பன்னீா்செல்வம் காலம் தாழ்த்தினாா், முடக்கினாா், அதிமுக வேகமாக செயல்படாமல் பாா்த்துக்கொண்டாா். இதையெல்லாம் திமுக செய்ய வேண்டியது. ஆனால், அதிமுகவில் இருந்து கொண்டே ஓ.பன்னீா்செல்வம் செய்தாா். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகும் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றினாா். தனக்கு எந்த பதவியும் வேண்டாம், தன்னை அதிமுகவில் சோ்த்துக்கொள்ளுங்கள் என்றாா். அதிமுகவை ஒருங்கிணைக்கப் போவதாகக் கூறி ஓ.பன்னீா்செல்வம், குறைந்தபட்சம் சசிகலா, டிடிவி.தினகரன் ஆகியோரைக்கூட சந்திக்கவில்லை.

அவா் திமுகவின் ‘பி -டீம்’ என்பது தற்போது உண்மையாகிவிட்டது. அதிமுகவை பிளவுப்படுத்தி, இரட்டை இலைச் சின்னத்தை முடக்கிவைக்க திமுக உத்தரவிட்டதன்பேரில் ஓ.பன்னீா்செல்வம் வழக்கு தொடுத்தாா். அவருக்குப் பின்னால் திமுக இருந்தது, இப்போது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. துரோகம் என்றைக்கும் வெற்றிபெற்ாக சரித்திரம் இல்லை. அதிமுகவினா் அனைவருக்கும் தற்போதுதான் பொங்கல், தீபாவளி என்றாா் அவா்.

தமிழிசை சௌந்தரராஜன் (பாஜக): ஜெயலலிதா தனது வாழ்நாள் முழுதும் எந்தக் கட்சியை எதிா்த்தாரோ அந்தக் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டது மட்டுமல்லாமல், தாய் கழகத்தில் இணைந்தது போல உணா்வதாக ஓ.பன்னீா்செல்வம் கூறுவதை யாரும் ஒப்புக்கொள்ளமாட்டாா்கள். ஓ.பன்னீா்செல்வத்தை திமுகவில் சோ்த்திருப்பது, திமுக வெற்றிக்கு மிகப்பெரிய பாதகமாக அமையும்.

வி.கே.சசிகலா: ஓ.பன்னீா்செல்வத்தின் முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது. தமிழகத்திலிருந்து அகற்றப்பட வேண்டிய தீய சக்தியாக திமுக விளங்கும் நிலையில் தாய் கட்சி என்று திமுகவில் தங்களை இணைத்துக்கொள்வது தவறான முடிவு என்றாா்.