

இந்த ஆண்டின் தொடக்க நாளில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 320 குறைந்துள்ளது.
தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. ஒரு சவரன்(22 காரட்) தங்கம் ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டி விற்பனையான நிலையில் நேற்று(டிச. 31) தங்கத்தின் விலை அதிரடியாக ரூ.960 குறைந்தது.
நேற்று மாலை நிலவரப்படி ஒரு சவரன் ரூ. 99,840-க்கும் ஒரு கிராம் ரூ. 12,480-க்கும் விற்பனையானது.
இதையடுத்து இன்றும்(ஜன. 1, 2026) புத்தாண்டு நாளில் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ. 320 குறைந்து ரூ. 99,520-க்கும் ஒரு கிராம் ரூ. 40 குறைந்து ரூ. 12,440-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 1 குறைந்து ரூ. 256-க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 2,56,000-க்கும் விற்பனையாகிறது.
தங்கம், வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது மக்கள் மத்தியில் சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.