

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவிக்கும்பொருட்டு சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு ரசிகர்கள் திரண்டனர்.
நடிகர் ரஜினியும் வெளியே வர, கூடியிருந்த ரசிகர்கள் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
ரஜினியும் உடனே ரசிகர்களைப் பார்த்து கையசைத்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
நீண்ட நேரம் காத்திருந்த ரசிகர்கள் ரஜினியைப் பார்த்தபிறகு மகிழ்ச்சியுடன் திரும்பிச் சென்றனர்.
புத்தாண்டையொட்டி அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் பலரும் மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் தான் நடித்த 'முத்து' படத்தில் உள்ள வசனத்தைப் பகிர்ந்து ரஜினி புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.