அதிமுகவில் விருப்ப மனு அளித்தவர்களுக்கு ஜனவரி 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த வேட்பாளர் நேர்காணல் ஒத்திவைக்கப்படுவதாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
இதுகுறித்து அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு சட்டப்பேரவைத் பொதுத் தேர்தல், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பொதுத் தேர்தல்களில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட வாய்ப்பு கோரி, விருப்ப மனு அளித்துள்ளவர்களுடனான நேர்காணல், சென்னை, இராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் 9.1.2026 – வெள்ளிக் கிழமை முதல் 13.1.2026 - செவ்வாய்க் கிழமை வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், 11.1.2026 மற்றும் 12.1.2026 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக இருந்த விருப்ப மனு அளித்துள்ளவர்களுடனான நேர்காணல், மாற்றி அமைத்து முறையே 12.1.2026 மற்றும் 24.1.2026 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.