தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு ஜன.26 ஆம் தேதிக்கு மாற்றம்

தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாட்டை ஜன.26 ஆம் தேதிக்கு மாற்றம் செய்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு ஜன.26 ஆம் தேதிக்கு மாற்றம்
Updated on
2 min read

தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாட்டை ஜன.26 ஆம் தேதிக்கு மாற்றம் செய்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில், தந்தை பெரியார்- பேரறிஞர் அண்ணா-முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் மகளிர் மேம்ப்பாட்டுக்கென தொடர்ச்சியான திட்டங்களை வகுத்து, 1.31 கோடி மகளிருக்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’, ‘விடியல் கட்டணமில்லா பேருந்துப் பயணம்’, கல்வி கற்கும் மாணவிகளுக்கு ‘புதுமைப் பெண் திட்டம்’, வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பாதுகாப்பான ‘தோழி விடுதி’, இந்தியாவிலேயே அதிக அளவாக 43 சதவீதம் வேலைக்குப் போகும் பெண்களைக் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்வதற்கான சூழல் என மகளிர் மேம்பாட்டுக்காக தொடர்ச்சியான திட்டங்களை வகுத்து வரும் தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் தலைமையில், கடந்த 29.12.2025 அன்று திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில், “பார் சிறுத்ததோ, படை பெருத்ததோ” என்று சொல்லத்தக்க வகையில், “வெல்லும் தமிழ்ப் பெண்கள்”தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு கறுப்பு சிகப்பு மகளிர் அணி படையின் மாபெரும் எழுச்சியோடு வெற்றிகரமாக நடைபெற்றதைத் தொடர்ந்து;

தமிழ்நாடு முதல்வர் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றிட – கட்சி முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு முன்னிலையில், கட்சி துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி , எம்.பி., தலைமையில்; கட்சிப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, முனைவர் க.பொன்முடி, திருச்சி சிவா, எம்.பி., ஆ.இராசா, எம்.பி., அந்தியூர் ப.செல்வராஜ், எம்.பி., மு.பெ.சாமிநாதன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி - கட்சி மகளிர் அணித் தலைவர் விஜயா தாயன்பன், மகளிர் அணிச் செயலாளர் ஹெலன் டேவிட்சன், மகளிர் தொண்டர் அணிச் செயலாளர் நாமக்கல் ப.இராணி ஆகியோர் பங்கேற்பில்; வருகிற ஜனவரி-19 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு 26.01.2026 திங்கட்கிழமை அன்று மாலை 4.00 மணி அளவில் நடைபெறும்.

மாவட்டக் கழகச் செயலாளர்/பொறுப்பாளர்களான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எஸ்.எஸ்.சிவசங்கர், அன்பில் மகேஸ்பொய்யாமொழி, எஸ்.ரகுபதி, சி.வி.கணேசன், பூண்டி கே.கலைவாணன், எம்.எல்.ஏ., காடுவெட்டி தியாகராஜன், எம்.எல்.ஏ., க.வைரமணி, க.அன்பழகன், எம்.எல்.ஏ., திரு.வீ.ஜெகதீசன், நிவேதா முருகன், எம்.எல்ஏ., கே.கே.செல்லபாண்டியன், என்.கௌதமன், டி.பழனிவேல் அமைச்சர் பெருமக்களான கோவி.செழியன், சிவ வீ.மெய்யநாதன், டி.ஆர்.பி.ராஜா – நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.கல்யாணசுந்தரம், அருண்நேரு, எம்.பி., முரசொலி, எம்.பி., மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இம்மாநாட்டினை ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்வார்கள்.

நிறைவாக, தஞ்சாவூர் மத்திய மாவட்டச் செயலாளர் .துரை.சந்திரசேகரன், எம்.எல்.ஏ., நன்றியுரையாற்றுகிறார். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Summary

The tamil Nadu DMK has announced that it will organize a Women’s Conference for the Delta region in thanjavur on January 26.

தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு ஜன.26 ஆம் தேதிக்கு மாற்றம்
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: மேல்முறையீட்டு வழக்கில் நாளை தீர்ப்பு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com