திருச்சியில் நடைபெறும் பாஜகவின் சிறப்பு பொங்கல் விழாவில் மத்திய அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இரண்டு நாள் பயணமாக நேற்று(ஜன.4) தமிழகம் வந்துள்ளார்.
திருச்சியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் பிரசார பயணத்தின் நிறைவு விழாவில் பங்கேற்றுப் பேசினார். பின்னர் தேர்தல் குறித்து பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இதன்பின்னர் இன்று(திங்கள்) காலை திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனம் செய்தார் அமித் ஷா.
தொடர்ந்து திருச்சி மன்னார்புரத்தில் உள்ள ராணுவ மைதானத்தில் "நம்ம ஊரு மோடி பொங்கல்" என்ற பெயரில் மிக பிரமாண்ட அளவில் சிறப்பு பொங்கல் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி, இன்று காலை 1,008 பொங்கல் பானைகளுடன் பெண்கள் விழாவில் கலந்துகொண்டு பொங்கல் வைக்கின்றனர்.
மத்திய அமைச்சர் அமித் ஷா, இந்த பொங்கல் விழாவில் கலந்துகொண்டு விழாவைத் தொடங்கிவைத்து மக்களுக்கு பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரான பியூஷ் கோயல், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணையமைச்சர் எல். முருகன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.
தமிழ்நாட்டில் பொங்கலைக் கொண்டாடும் முதல் கட்சியாக பாஜக உள்ளது என்று தமிழிசை பேசும்போது தெரிவித்தார்.
இன்று பகல் 1 மணியளவில் கார் மூலம் திருச்சி விமான நிலையம் செல்லும் அமித் ஷா, அங்கிருந்து தில்லி புறப்பட்டுச் செல்கிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.