தொகுதிப் பங்கீடு: அமித் ஷாவுடன் எஸ்.பி. வேலுமணி 2-ம் நாளாக ஆலோசனை!

தொகுதிப் பங்கீடு குறித்து அமைச்சர் அமித் ஷாவுடன் எஸ்.பி. வேலுமணி ஆலோசனை...
 S.P. Velumani holds discussions with Amit Shah
திருச்சியில் அமித் ஷா
Updated on
1 min read

கூட்டணி விரிவாக்கம், தொகுதிப் பங்கீடு குறித்து அதிமுகவின் எஸ்.பி. வேலுமணியுடன் அமித் ஷா தொடர்ந்து 2-ம் நாளாக திருச்சியில் இன்று பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இரண்டு நாள் பயணமாக நேற்று(ஜன.4) தமிழகம் வந்துள்ளார். திருச்சியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் பிரசார பயணத்தின் நிறைவு விழாவில் பங்கேற்றுப் பேசிய பின்னர் அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து எஸ்.பி. வேலுமணியுடன் நேற்று அமித் ஷா பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடர்ந்து இன்று 2-ம் நாளாக திருச்சியில் அமித் ஷா தங்கியுள்ள தனியார் ஹோட்டலில் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

அமித் ஷா, எஸ்.பி. வேலுமணி, தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் உள்ளிட்டோர் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

கூட்டணியில் இன்னும் சில கட்சிகளைச் சேர்ப்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓபிஎஸ், டிடிவி தினகரன், பாமக மற்றும் சில கட்சிகளைச் சேர்க்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது.

அதேபோல அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் வழங்கப்படும் என்பதும் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

அமித் ஷா இன்று(திங்கள்) காலை திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் மன்னார்புரத்தில் உள்ள ராணுவ மைதானத்தில் நடைபெறும் "நம்ம ஊரு மோடி பொங்கல்" விழாவில் கலந்துகொண்டார்.

Summary

Alliance Seat sharing: S.P. Velumani holds discussions with Amit Shah in Trichy

 S.P. Velumani holds discussions with Amit Shah
திருச்சியில் 'நம்ம ஊரு மோடி பொங்கல்' விழா: அமைச்சர் அமித் ஷா பங்கேற்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com