

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று(ஜன. 7) மாலை தில்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசுகிறார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்படவுள்ளதையடுத்து கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
அந்தவகையில் இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி இருவரும் சந்தித்துப் பேசியதையடுத்து இரு கட்சிகளின் கூட்டணி உறுதியாகியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக எடப்பாடி பழனிசாமி இன்று மாலை தில்லிக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசவுள்ளதாகவும் இரு கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு குறித்து இறுதி செய்ய உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலையும் அமித் ஷாவிடம் வழங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.