தவெக தேர்தல் அறிக்கை குழு அறிவிப்பு: செங்கோட்டையனுக்கு இடமில்லை!

12 பேர் கொண்ட தவெக தேர்தல் அறிக்கை குழுவில் செங்கோட்டையன் இடம்பெறவில்லை.
செங்கோட்டையன் - விஜய்
செங்கோட்டையன் - விஜய்Center-Center-Coimbatore
Updated on
1 min read

தவெக தேர்தல் அறிக்கை குழு : 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழுவை அமைத்து, அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கே.ஜி. அருண்ராஜ், ஜே.சி.டி. பிரபாகர் உள்ளிட்ட 12 பேர் கொண்ட குழுவில், தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் இடம்பெறவில்லை என்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து கட்சியின் தலைவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்தையும் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் நோக்கமாகக் கொண்டு, நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட இருக்கிறது.

இதற்காகச் சிறப்புக் குழு அமைக்கப்படுகிறது. இந்தக் குழு. தமிழகம் முழுவதும் பொதுமக்கள். சிறு, குறு தொழில் அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள், பொருளாதார மற்றும் தொழில் வல்லுநர்கள், வர்த்தக சபைகள், பல்வேறு ஊழியர் சங்கங்கள், விவசாயச் சங்கங்கள். கல்வியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மகளிர் அமைப்புகள், இளைஞர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துகளையும் தேவைகளையும் அறிந்து, தரவுகளைப் பெறவுள்ளது.

அவர்களிடம் இருந்து பெறப்படும் தரவுகளின் அடிப்படையில் தமிழ்நாட்டு மக்களையும் ஒட்டுமொத்த மாநிலத்தையும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் வகையில் தேர்தல் அறிக்கையினைத் தயார் செய்யவுள்ளது.

தேர்தல் அறிக்கை குழுவில், கே.ஜி. அருண்ராஜ், ஜேசிடி பிரபாகர், ஏ. ராஜ்மோகன், டிஎஸ்கே மயூரி, ஏ. சம்பத்குமார், எம். அருள் பிரகாசம், ஆர். பரணிபாலாஜி, ஜே. முகமது பர்வேஸ், டிகே. பிரபு, கிறிஸ்டி பிருத்வி, தேன்மொழி பிரசன்னா, எம். சத்யகுமார் ஆகியோருக்கு கட்சித் தோழர்கள் முழு ஒத்துழைப்பு நல்குவதோடு அந்தந்தப் பகுதிகளில் சம்பந்தப்பட்ட அமைப்புகளைச் சந்திக்கும் பொழுதுதேவையான உதவிகளைச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தில் அண்மையில் இணைந்த ஜேசிடி பிரபாகர், இக்குழுவில் இடம்பெற்றிருக்கும்போது, மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் இடம்பெறாதது பேசுபொருளாகியிருக்கிறது.

Summary

Sengottaiyan was not included in the 12-member Thaveka election manifesto committee.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com