திமுகவினர் போன்று யாராலும் வேலை செய்ய முடியாது: முதல்வர் ஸ்டாலின்

திமுகவினர் போன்று யாராலும் வேலை செய்ய முடியாது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின்.
முதல்வர் ஸ்டாலின்.
Updated on
1 min read

திமுகவினர் போன்று யாராலும் வேலை செய்ய முடியாது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொளத்தூர் தொகுதி பொங்கல் விழாவில் அவர் பங்கேற்று பேசுகையில், பொங்கல் விழாவை இன்றைக்கு நாம் சிறப்பாக கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். நம்முடைய திராவிட மாடல் அரசு பொறுப்பேற்று நான்கரை ஆண்டு காலத்தில் என்னென்ன திட்டங்களையெல்லாம் செய்திருக்கிறது, என்னென்ன சாதனைகளையெல்லாம் புரிந்திருக்கிறது என்பது உங்களுக்கு நான் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், நீங்கள் மக்களிடத்தில் எடுத்துச் சொல்ல வேண்டும்.

அதற்காகத்தான் இந்த பொங்கல் விழாவை இப்படி எழுச்சியோடு கூட்டி உங்களை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்துவதற்காக, இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே நீங்கள் தேர்தல் களத்தில் ஆற்றவேண்டிய பணிகளில் 50 சதவிகிதம் முடித்துவிட்டீர்கள். இன்னும் 50 சதவிகிதம் தான் மீதம் இருக்கிறது.

இன்றைக்கு பல்வேறு கட்சிகளை சார்ந்தவர்கள். ஏன், பா.ஜ.க.வில் இருக்கக்கூடியவர்கள் கூட என்ன சொல்கிறார்கள் என்றால், திமுக-காரர்கள் போன்று யாராலும் வேலை செய்ய முடியாது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால், 1967-இல் பேரறிஞர் அண்ணா தலைமையில் ஆட்சி அமைந்தபோது அன்றைக்கு முன்னாள் முதலமைச்சராக இருந்த பெரியவர் பக்தவச்சலம் பத்திரிகையாளர்களிடம் பேட்டி அளித்தபோது ஒன்றைக் குறிப்பிட்டுச் சொன்னார்.

“திமுக-காரன் ஒரு சிங்கில் டீயை குடித்துவிட்டு பம்பரமாக வேலை செய்வான். அதற்கு நாமெல்லாம் ஈடாக முடியாது” என்று வெளிப்படையாகவே சென்னவர் அவர். அதே உணர்வோடு இன்றைக்கும் நான் பார்க்கிறேன். நீங்கள் ஆற்றக்கூடிய பணிகள், ஏதோ கொளத்தூர் தொகுதியில் மட்டுமல்ல. ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர்கள் நம்முடைய செயல் வீரர்கள் ஆற்றும் அந்தப் பணிகளையெல்லாம் பார்க்கின்றபோது - 200 தொகுதிகளுக்கு குறையாமல் வெற்றி பெறுவோம் என்று, நம்முடைய கூட்டணி நிச்சயமாக வெற்றிபெறும் என்று நான் ஏற்கெனவே சொல்லியிருந்தேன்.

ஆனால், நாம் இப்போது ஆற்றியிருக்கும் பணிகளையெல்லாம் பார்க்கின்றபோது 200 தொகுதிகளையும் தாண்டி வரும் என்ற நம்பிக்கை எனக்கு வந்திருக்கிறது. அந்த நம்பிக்கையோடு பொங்கல் விழாவை நாம் கொண்டாடுகிறோம். பொங்கல் விழாவை கொண்டாடும் இந்த நேரத்தில் உங்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்து வரவிருக்கும் தேர்தலில் ஒரு மாபெரும் வெற்றி பெறுவதற்கு உறுதியெடுப்போம் சபதம் எடுப்போம், என்று கூறி மீண்டும் வாழ்த்து சொல்லி விடைபெறுகிறேன்.

முதல்வர் ஸ்டாலின்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்! அரசாணை வெளியீடு!
Summary

Chief Minister Stalin has said that no one can work like the DMK people.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com