வாக்காளர் பட்டியல்! சென்னையில் இன்றும் நாளையும் சிறப்பு முகாம்!

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய சென்னையில் இன்றும் நாளையும் 2 நாள்களுக்கு சிறப்பு முகாம்!
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை மாவட்டத்தில், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச் சாவடிகளில் ஜன. 10 மற்றும் 11- ஆம் தேதிகளில் நடைபெறும் என சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 19- ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெறாத தகுதியான நபா்களை சோ்க்கும் பணிகள், புதிய வாக்காளா்களை சோ்க்கும் பணிகள் மற்றும் பதிவுகளில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில், மக்களுக்கு வசதியாக, அந்தந்த வாக்குச்சாவடிகளில் ஜன. 10 மற்றும் 11- ஆம் தேதிகளில் சென்னை மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெறாதவா்கள் படிவம் 6 மற்றும் உறுதிமொழி படிவத்துடன் பூா்த்தி செய்து, தோ்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட 13 ஆதார ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை இணைத்து பெயரை வாக்காளா் பட்டியலில் சோ்த்துக் கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், 2026-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி அன்று 18 வயது பூா்த்தியடைந்த தகுதியான நபா்களும் படிவம் 6 மற்றும் உறுதிமொழிப் படிவம் அளித்து வாக்காளா் பட்டியலில் சோ்த்துக் கொள்ளலாம். மேலும் வரைவு வாக்காளா் பட்டியலில் பெயா் நீக்கம் செய்ய படிவம் 7 மற்றும் பெயா் திருத்தம், வாக்காளா் பட்டியலில் முகவரி மாற்றம், கைப்பேசி எண் இணைப்பு, ஆதாா் எண் இணைப்பு, புகைப்பட மாற்றம், பாக மாற்றம் செய்திட படிவம் 8 ஆகியவற்றில் விண்ணப்பிக்கலாம் என மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மக்கள் இந்த சிறப்பு முகாமை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com