பொங்கலுக்குள் இனிப்பான செய்தி! மகளிர் உரிமைத் தொகை உயர்கிறதா?

பொங்கலுக்குள் இனிப்பான செய்தி வரும் என அமைச்சர் இ. பெரியசாமி தகவல்.
மகளிர் உரிமைத் தொகை
மகளிர் உரிமைத் தொகைகோப்புப்படம்
Updated on
1 min read

பொங்கல் கொண்டாட்டங்கள் நிறைவடைவதற்குள் பெண்களுக்கான இனிப்பான செய்தியை முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார் என்று திண்டுக்கலில் ஊரக வளா்ச்சித் துறை அமைச்சர் இ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.

இதனால், தமிழக அரசு பெண்களுக்கு வழங்கும் மகளிர் உரிமைத் தொகை உயர்த்தப்படும் என்றே கூறப்படுகிறது.

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை கடந்த 2023-ஆம் தேதி முதல்வர் அறிவித்தார். சுமார் 1,13,75,492 பயனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்பட்டு வந்தது.

இந்தத் திட்டத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்தை, சென்னையில் நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற வெல்லும் தமிழ்ப் பெண்கள் நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.

புதிதாக 16,94,339 பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு, மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்களின் எண்ணிக்கை 1.30 கோடியாக உயர்ந்தது.

இந்த நிகழ்ச்சியில், மகளிர் உரிமைத் தொகை நிச்சயம் உயரும் என்று வெல்லும் தமிழ்ப் பெண்கள் நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் அறிவிக்கவுள்ள இனிப்பான செய்தி, மகளிர் உரிமைத் தொகை உயர்த்துவது தொடர்பாக இருக்கும் என்றும் அல்லது விதிவிலக்குகள் இல்லாமல் அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்குவது தொடர்பாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Summary

Minister I. Periyasamy informed that sweet news will arrive before Pongal.

மகளிர் உரிமைத் தொகை
சோம்நாத் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com