

காங்கிரஸ் கட்சியின் துரோகத்தை பராசக்தி படம் காட்டியுள்ளது என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டியில், ராஜ் தாக்கரே போன்றோர் மேடை போட்டு திட்டும் அளவிற்கு நான் வளர்ந்துள்ளேன். நான் மும்பைக்குள் கால் எடுத்து வைத்தால் காலை வெட்டுவேன் என ராஜ் தாக்கரே கூறியிருக்கிறார். யார் மிரட்டினாலும் நான் மும்பை செல்வதை தடுக்க முடியாது. நான் மும்பைக்கு வருவேன், முடிந்தால் என் காலை வெட்டுங்கள் பார்ப்போம். மிரட்டி, மிரட்டியே வாழ்பவர்களை பற்றி எனக்கு கவலை இல்லை, அஞ்ச மாட்டேன்.
என்னை விமர்சிப்பதாக தமிழர்கள் குறித்து கொச்சையாக, அவதூறாக சிவசேனை கட்சி விமர்சிக்கிறது. பராசக்தி அனைவரும் பார்க்க வேண்டிய படம். காங்கிரஸைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய படம். காங்கிரஸ் கட்சி செய்த துரோகத்தை பராசக்தி படம் காட்டியுள்ளது. காங்கிரஸின் துரோகத்தை புரிந்துகொண்டு அவர்களுக்கு யாரும் ஓட்டுப் போடக்கூடாது. ஜனநாயகன் திரைப்படத்திற்காக நானும் ஆவலுடன் காத்திருந்தேன். பராசக்தி திரைப்படத்தை பார்த்துவிட்டேன்.
அதனால் கருத்து சொல்கிறேன். ஜனநாயகன் திரைப்படத்தையும் பார்த்துவிட்டு என்னுடைய கருத்தை நிச்சயம் சொல்வேன். தேசிய ஜனநாயகக் கூட்டணி வலிமையாக இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். நிறைய குறைகளும் கொஞ்சம் நிறைகளும் கொண்ட ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது. இவ்வாறு குறிப்பிட்டார். முன்னதாக மகாராஷ்டிர தேர்தலில் பிரசாரம் மேற்கொண்ட அண்ணாமலையை விமர்சித்து ராஜ் தாக்கரே பேசியிருந்த நிலையில் அண்ணாமலை அதற்கு பதிலளித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.