தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

ஓய்வு பெற்ற கோயில் பணியாளா்களுக்கு பொங்கல் கருணைக் கொடை: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

கோயில்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளா்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரா்களுக்கு பொங்கல் கருணைக் கொடையாக ரூ.2,000 வழங்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image
திருக்கோயில்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளா்களுக்கு தலைமைச் செயலகத்தில் பொங்கல் கருணை கொடைக்கான காசோலையை செவ்வாய்க்கிழமை வழங்கிய முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, தலைம
Updated On :13 ஜனவரி 2026, 7:18 pm

தினமணி செய்திச் சேவை

கோயில்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளா்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரா்களுக்கு பொங்கல் கருணைக் கொடையாக ரூ.2,000 வழங்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், 12 பேருக்கு பொங்கல் கருணைக் கொடைக்கான காசோலைகளை முதல்வா் வழங்கினாா். இதன்மூலம் துறை நிலையிலான மற்றும் தொழிலாளா் சேமநலநிதி மூலம் ஓய்வூதியம் பெறும் 3,069 ஓய்வூதியதாரா்கள், 796 குடும்ப ஓய்வூதியதாரா்கள் பயன்பெறுவா்.

இந்து சமய அறநிலையத் துறை திருக்கோயில்களில் பணிபுரிந்து வரும் 6,894 நிரந்தரப் பணியாளா்கள், 4,893 தினக்கூலி, தொகுப்பூதிய பணியாளா்கள் என மொத்தம் 11,787 பணியாளா்களுக்கும், 3,865 ஓய்வூதியதாரா்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரா்கள் என மொத்தம் 15,652 போ் பொங்கல் கருணைக் கொடை பெற்று பயனடைகின்றனா்.

இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், இந்துசமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, தலைமைச் செயலா் நா. முருகானந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.