

நாட்டுக்கு சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள், வலிமை, சிறந்த ஆளுமைத் திறனுடைய குடிமகன்களை உருவாக்கும் பணியில் உடற்பயிற்சிக் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது.
பள்ளிக் கல்வியின் ஒருங்கிணைந்த பகுதியாக விளையாட்டு உள்ளது. விளையாட்டு கலாசாரத்தை உறுதி செய்யும் ஒரு கட்டமைக்கப்பட்ட விளையாட்டுக் கல்வி, உடல் மற்றும் வளர்ச்சியை மேம்படுத்தவும் வழிவகுத்துள்ளது. விளையாட்டுகளில் தொடர்ந்து பங்கேற்பது சகிப்புத்தன்மை, வலிமை, ஒருங்கிணைப்பு மற்றும் நெகிழ்வுத் தன்மையை வளர்க்க உதவுகிறது. இது ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கிறது,
தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் குழந்தைகள் கைப்பேசிகள், கணினிகளை பயன்படுத்தவே அதிகம் நேரத்தை செலவிடுகின்றனர். அவர்களுக்கு சிறந்த உடல் வலிமை, வளர்ச்சியை பள்ளிகளில் உடற்பயிற்சி பாடவேளைகள் வழங்குகின்றன. விளையாட்டுக் கல்வி மாணவர்களுக்கு விடாமுயற்சி, ஒழுக்கம் மற்றும் மீள்தன்மை பற்றிய மதிப்புமிக்க வாழ்க்கைப் பாடங்களைக் கற்பிக்கிறது. வெற்றிகள் மற்றும் தோல்விகள் இரண்டின் மூலமும், மாணவர்கள் அழுத்தத்தைக் கையாளவும், சவால்களை வெல்லவும், பின்னடைவுகளில் இருந்து மீண்டு வரவும் கற்றுக்கொள்கிறார்கள்.
பல்வேறு தரப்பினருக்கும் வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம் வழங்குவதாக உள்ளது விளையாட்டு. திறன் மேம்பாடு, உடல்தகுதியை உருவாக்குவது, உத்தியை வகுத்து செயல்படுத்துவது, குறிப்பிட்ட கட்டத்தில் விளையாட்டை மேம்படுத்துவது, விளையாட்டு அனுபவங்களைப் பகிர்வது, தலைமைப் பண்பை ஏற்படுத்துவது, விளையாட்டு நிகழ்வுகளில் உரிய முடிவுகளை எடுத்தல், நடுவர் செயல்பாடு குறித்து அறிவது போன்றவை இவற்றின் ஒரு அம்சமாகும்.
உடற்கல்வி இயக்குநர்கள், ஆசிரியர்கள் பொறுப்பு என்பது பிற பாட ஆசிரியர்களுக்கு எந்த விதத்திலும் குறைந்ததில்லை. ஒரு குழந்தை சிறப்பாக படிக்க நல்ல உடல்நலன் அவசியமாகும். பள்ளிகளில் தான் எதிர்கால ஆசிய, ஒலிம்பிக் சாம்பியன்கள் உருவாகின்றனர்.
விளையாட்டின் இரு கண்கள்!
உடற்பயிற்சி ஆசிரியர்கள்/இயக்குநர்கள், பயிற்சியாளர்கள் ஆகியோர் விளையாட்டின் இரு கண்களாகத் திகழ்கின்றனர். அடிப்படை பயிற்சிகளை உடற்கல்வி ஆசிரியர்களும், அறிவியல் பூர்வமான பயிற்சியை பயிற்சியாளர்களும் அளிக்கின்றனர்.
உடற்கல்வி ஆசிரியர்கள், பல்வேறு விளையாட்டுகளில் பயிற்சியாளர்களை உருவாக்குவதில் இந்தியா முழுவதும் தலைசிறந்த கல்வி நிலையங்கள் செயல்படுகின்றன. சிறந்த பயிற்சியாளர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் ஏராளமானோர் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள், உடற்கல்வியியல் கல்லூரிகளில் பயின்று வருகின்றனர். நடுவர், பயிற்சியாளர், கிளப் மேனேஜர், விளையாட்டு இதழியல், விளையாட்டு மேலாண்மை என விளையாட்டுத் துறையில் மட்டுமல்ல, கல்வி நிறுவனங்களிலும் வேலைவாய்ப்புகள் காத்துக் கிடக்கின்றன.
இளநிலை பாடப்பிரிவுகள்
பிபிஎட் (பேச்சுலர் ஆஃப் பிசிக்கல் எஜுகேஷன்)
பிபிஇஎஸ் (பேச்சுலர் ஆஃப் பிசிக்கல்
எஜுகேஷன் அன்ட் ஸ்போர்ட்ஸ்)
பிஎஸ்சி (ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷியன்)
பிஎஸ்சி (ஸ்போர்ட்ஸ் கோச்சிங்)
பிஜி டிப்ளமோ
ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட்
ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷியன்
ஸ்போர்ட்ஸ் ஜர்னலிஸம்
அன்ட் மாஸ் மீடியா
டெக்னாலஜி
அட்வென்ட்சர்
ஸ்போர்ட்ஸ்
அட்மினிஸ்ட்ரேஷன்
ஃபிட்னஸ்
மேனேஜ்மென்ட்
ஸ்போர்ட்ஸ் கோச்சிங்
முதுநிலை பாடப்பிரிவுகள்
எம்பிஎட் (மாஸ்டர் ஆஃப் பிசிக்கல் எஜுகேஷன்)
எம்ஏ, (மாஸ்டர் ஆஃப் ஸ்போர்ட்ஸ் ஜர்னலிஸம் அன்ட் மாஸ் மீடியா டெக்னாலஜி
எம்பிஇஎஸ் (மாஸ்டர் ஆஃப் பிசிக்கல் எஜுகேஷன் அன்ட் ஸ்போர்ட்ஸ்)
எம்எஸ்சி (எக்ஸர்ஸைஸ் பிசியாலஜி அன்ட் நியூட்ரிஷியன்),
எம்எஸ்சி (ஸ்போர்ட்ஸ் பயோ மெக்கானிக்ஸ் அன்ட் கைன்ஸ்சியாலஜி)
எம்எஸ்சி (யோகா)
எம்எஸ்சி (ஸ்போர்ட்ஸ் சைக்காலஜி அன்ட் சோசியாலஜி),
எம்பிஏ (ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட்)
எம்டெக் (ஸ்போர்ட்ஸ் டெக்னாலஜி)
எம்எஸ்சி (ஸ்போர்ட்ஸ் கோச்சிங்),
எம்ஃபில், பிஹெச்டி
பிரபலமான கல்வி நிலையங்கள்
லக்ஷ்மிபாய் தேசிய உடற்கல்விக் கல்லூரி, திருவனந்தபுரம், கேரளம்.
நேதாஜி சுபாஷ் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப்
ஸ்போர்ட்ஸ், பாட்டியாலா, பஞ்சாப்
லக்ஷ்மிபாய் தேசிய உடற்கல்விக் கல்லூரி, குவாலியர், மத்தியபிரதேசம்
தமிழ்நாடு உடற்கல்வியியல், விளையாட்டுப் பல்கலைக்கழகம்,
மேலக்கோட்டையூர், சென்னை, தமிழ்நாடு
குரு கோவிந்த் சிங் விளையாட்டுக் கல்லூரி, லக்னெள, உத்தர பிரதேசம்
இந்திரா காந்தி உடற்கல்வி, விளையாட்டு அறிவியல் கல்லூரி, புதுதில்லி
உடற்கல்வியியல் கல்லூரி, புணே, மகாராஷ்டிரம்
பாம்பே பிசிக்கல் கல்ச்சர் அசோசியேஷன்
உடற்கல்விக் கல்லூரி, மும்பை, மகாராஷ்டிரம்
அமிட்டி உடற்கல்வி, விளையாட்டு அறிவியல் பள்ளி,
நொய்டா, உத்தர பிரதேசம்
சத்குரு எஜுகேஷன் சொசைட்டி உடற்கல்விக் கல்லூரி,
ஜல்கான், மகாராஷ்டிரம்.
விளையாட்டுப் பயிற்சியாளர்கள்
பல்வேறு விளையாட்டுகளுக்கான பயிற்சியாளர்களை உருவாக்கும் பிரதான மையமாக உள்ளது பாட்டியாலா நேதாஜி சுபாஷ் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்போர்ட்ஸ். இந்திய விளையாட்டுத் துறையின் மெக்கா என்று இது அழைக்கப்படுகிறது. 268 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்த மையத்தில் 6 வார சான்றிதழ் பயிற்சி, ஓராண்டு பயிற்சியுடன் பயிற்சியாளர்களுக்கான பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பாட்டியாலா மையத்தில் படித்தவர்கள் பல்வேறு இந்திய அணிகளின் தலைசிறந்த பயிற்சியாளர்களாக விளங்குகின்றனர். 2020 தேசிய கல்விக் கொள்கையிலும் விளையாட்டுக் கல்வி முக்கிய இடம் பெற்றுள்ளது. பள்ளிக் கல்வியுடன் விளையாட்டையும் முழுமையாக ஒருங்கிணைக்க வேண்டும் என இதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அணியிலும் பயிற்சியாளர், உதவிப் பயிற்சியாளருடன், உடலியக்க நிபுணர்கள், கண்டிஷனிங் பயிற்சியாளர், மன அழுத்தத்தைப் போக்கும் நிபுணர்களும் இடம் பெறுகின்றனர். இதனால் விளையாட்டுக் கல்வி என்பது பலருக்கும் சிறந்த வேலைவாய்ப்பை தருகிறது என்பதில் ஐயமில்லை.
-பா.சுஜித்குமார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.