திருநெல்வேலி - தாம்பரம் இடையே ஜன. 18 சிறப்பு ரயில்: முன்பதிவு நாளை தொடக்கம்!

திருநெல்வேலி - தாம்பரம் இடையே ஜன. 18 ஒருவழிச் சிறப்பு ரயில்!
சிறப்பு ரயில்
சிறப்பு ரயில்@GMSRailway
Updated on
1 min read

திருநெல்வேலி - தாம்பரம் இடையே ஜன. 18-ஆம் தேதி ஒருவழிச் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதற்கான, முன்பதிவு நாளை (ஜன. 15) காலை 8 மணிக்கு தொடங்கும் என்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் விடுமுறையையொட்டி சொந்த ஊர்களுக்குப் படையெடுத்த மக்கள் கூட்டத்தைக் கருத்திற்கொண்டு, பயணிகளின் வசதிக்காக இந்தச் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

திருநெல்வேலி ரயில் நிலையத்திலிருந்து ஜன. 18 பகல் 1 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் (06178) மறுநாள் அதிகாலை 3 மணிக்கு தாம்பரத்தைச் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், தென்காசி, சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாகச் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Tirunelveli – Tambaram One Way Express Special will run on 18 Jan 2026.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com