கரூர் சம்பவம்: சுகாதாரத் துறை அதிகாரிகள், காவலர்களிடம் சிபிஐ விசாரணை

கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக 8 சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் 5 காவலர்களிடம் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை விசாரணை நடத்தினர்.
Updated on
1 min read

கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக 8 சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் 5 காவலர்களிடம் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை விசாரணை நடத்தினர்.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப். 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்; 110 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், நெரிசலில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டன. அப்போது, அங்கு பணியாற்றிய சுகாதாரத் துறை அதிகாரிகள் 8 பேர் மற்றும் நெரிசல் சம்பவ இடத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட 5 காவலர்களிடம் புதன்கிழமை சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com