ஜல்லிக்கட்டு வரலாற்றில் முதல்முறையாக ‘டிஜிட்டல்’ ஸ்கோர்போர்டு, எல்இடி திரை!

ஜல்லிக்கட்டு வரலாற்றில் முதல்முறையாக ‘டிஜிட்டல்’ ஸ்கோர்போர்டு வைக்கப்பட்டுள்ளதைப் பற்றி...
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் வைக்கப்பட்டுள்ள ‘டிஜிட்டல்’ ஸ்கோர்போர்டு.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் வைக்கப்பட்டுள்ள ‘டிஜிட்டல்’ ஸ்கோர்போர்டு.
Updated on
1 min read

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வரலாற்றில் முதல்முறையாக ‘டிஜிட்டல்’ ஸ்கோர்போர்டு வைக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் பண்டிகையொட்டி, மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்கநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறவது வழக்கம். அதன்படி, நிகழாண்டுக்கான போட்டி இன்று காலை அவனியாபுரத்தில் தொடங்கியது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியை பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் பி. மூர்த்தி, மதுரை ஆட்சியர் பிரவீன்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்தப் போட்டியில் உடற்தகுதிபெற்ற சுமார் 1,100 ஜல்லிக்கட்டு காளைகள் பங்கேற்றுள்ளன.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி ஆரம்பிக்கும் முன் கிராமத்தினர் சார்பில் பூஜை செய்து வழிபாடு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து வீரர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

வாடிவாசலின் முன்பு உறுதிமொழி எடுக்கப்பட்டு முதல் காளையாக கோயில் காளை களமிறக்கப்பட்டது. பின்னர், தொடர்ச்சியாக ஜல்லிக்கட்டு காளைகள் களமிறக்கப்பட்டன.

இந்த போட்டியில் பங்கேற்பதற்காக மதுரை மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஜல்லிக்கட்டு காளைகள் களமிறக்கப்பட்டுள்ளன.

ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் வரலாற்றில் இல்லாத நிகழ்வாக முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த முறை ஜல்லிக்கட்டு போட்டியில் ஒவ்வொரு வீரரும் எடுக்கும் புள்ளியை கணக்கிட ஸ்கோர்போர்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எல்இடி திரையில் வீரர்களின் புள்ளி விவரம் திரையிடப்படுகிறது. ஒவ்வொரு சுற்றிலும் தலா 50 வீரர்கள் களமிறக்கப்படுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com