அன்பால் நிறைய வேண்டும் அகிலம் : மு.க. ஸ்டாலின்

சாலையோரங்களில் வசிப்பவர்களுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின்
முதல்வர் மு.க. ஸ்டாலின்படம் - எக்ஸ்
Updated on
1 min read

சாலையோரங்களில் வசிப்பவர்களுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார். அவர்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் அடங்கிய தொகுப்புப் பைகளை பரிசாக வழங்கினார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் முதல்வர் பதிவிட்டுள்ளதாவது:

அன்பால் நிறைந்திட வேண்டும் அகிலம்! உறவுகளைப் பிரிந்து, ஆதரவிழந்தோருக்கு அடைக்கலமாய், சென்னை மூன்றாவது கடற்கரைச் சாலையில் உள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் பொங்கல் விழாவைக் கொண்டாடினேன்!

செல்லும் வழியில், நேதாஜி சாலை நாராயணப்பதெருவில் சாலையோரங்களில் வசிக்கும் வீடற்றோரைச் சந்தித்து, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பில் அவர்களுக்குப் புதிய வீடுகளை வழங்கிட ஆணையிட்டுள்ளதைப் பகிர்ந்துகொண்டேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின்
பல்கலை. இடையிலான பேட்மிண்டன் போட்டிகள்! தொடக்கி வைத்தார் உதயநிதி!
Summary

world must be filled with love M.K. Stalin

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com