

சேலம் மாவட்டம் கெங்கவல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் ஆணையம்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த காவல்துறை அனுமதி மறுத்திருந்த நிலையில் பொதுமக்கள் வாடிவாசல் அமைத்து காளைகளை அவிழ்த்துவிட்டனர்.
பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட நூற்றுக்கணக்கான காளைகள் வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்தன. கூட்டத்தில் புகுந்த காளைகளைக் காளையர்கள் அடக்கி வருகின்றனர்.
காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினர் அனுமதி மறுக்கப்பட்டு இருந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி அப்பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.