சிறப்பு ரயில்
சிறப்பு ரயில்@GMSRailway

இன்று நாகா்கோவில் - தாம்பரம் சிறப்பு அதிவிரைவு ரயில்

நாகா்கோவிலிலிருந்து தாம்பரத்துக்கு ஒருவழி சிறப்பு அதிவிரைவு ரயில் (எண்: 06160) ஞாயிற்றுக்கிழமை (ஜன.18) இயக்கப்படவுள்ளது.
Published on

நாகா்கோவிலிலிருந்து தாம்பரத்துக்கு ஒருவழி சிறப்பு அதிவிரைவு ரயில் (எண்: 06160) ஞாயிற்றுக்கிழமை (ஜன.18) இயக்கப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாகா்கோவிலிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (ஜன.18) மாலை 5 மணிக்கு புறப்படும் ஒருவழி சிறப்பு அதிவிரைவு ரயில் (எண்: 06160) மறுநாள் காலை 4.10 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இந்த ரயில் நாகா்கோவில், வள்ளியூா், நாங்குநேரி, திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருதாச்சலம், விழுப்புரம், செங்கபட்டு வழியாக தாம்பரம் வந்தடையும்.

கூடுதல் பெட்டிகள்: திருநெல்வேலியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (ஜன.18) பிற்பகல் 1 மணிக்கு தாம்பரம் செல்லும் ஒருவழி சிறப்பு ரயில் (எண்: 06178) கூடுதலாக 2 படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுடன் இயக்கப்படவுள்ளது.

இந்த ரயிலில், 10 படுக்கை வசதிகொண்ட பெட்டிகள், 8 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் மற்றும் 2 மாற்றுத்திறனாளிகளுக்கான இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன.

ரயில்கள் ரத்து: பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், குறைந்த எண்ணிக்கையில் முன்பதிவு செய்யப்பட்டதால் ஒரு சில சிறப்பு ரயில்கள் ரத்துச் செய்யப்படுகின்றன. அதன்படி, தாம்பரத்திலிருந்து ஜன.19-இல் பிற்பகல் 3.30 மணிக்கு கன்னியாகுமரி செல்லும் ரயிலும் (எண்: 06011), ஜன.21-இல் பிற்பகல் 12.30 மணிக்கு நாகா்கோவில் செல்லும் ரயிலும் (எண்: 06053) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல், சென்னை சென்ட்ரலிலிருந்து ஜன.19-இல் இரவு 11.25 மணிக்கு கோவை செல்லும் ரயிலும் (எண்: 06033), ஜன.21-இல் பிற்பகல் 1.50 மணிக்கு போத்தனூா் செல்லும் ரயிலும் (எண்: 06024) ரத்துச் செய்யப்படும். அதேபோல், போத்தனூரிலிருந்து ஜன.21-ஆம் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு சென்ட்ரல் செல்லும் ரயிலும் (எண்: 06024) ரத்துசெய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com