எழும்பூா் - திருநெல்வேலிக்கு இன்று சிறப்பு ரயில்

தைப்பூசத்தை முன்னிட்டு, சென்னை எழும்பூரிலிருந்து திருநெல்வேலிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் வெள்ளிக்கிழமை (ஜன.30) இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on

தைப்பூசத்தை முன்னிட்டு, சென்னை எழும்பூரிலிருந்து திருநெல்வேலிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் வெள்ளிக்கிழமை (ஜன.30) இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே மண்டலம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, சென்னை எழும்பூரிலிருந்து வெள்ளிக்கிழமை (ஜன.30), இரவு 11.45 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில் (எண்: 06001) சனிக்கிழமை (ஜன.31) பிற்பகல் 11.15 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும். மறுமாா்க்கத்தில் திருநெல்வேலியிலிருந்து பிப்.1-ஆம் தேதி இரவு 10.35 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில் (எண்: 06002) மறுநாள் திங்கள்கிழமை (பிப்.2) காலை 9.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், அரியலூா், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com