தமிழகத்துக்கு அம்ருத் ரயில்: எல்.முருகன் வரவேற்பு
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களையும் இணைக்கும் வகையில் புதிய அம்ருத் பாரத் ரயில் இயக்கப்படும் என்ற அறிவிப்பை மத்திய இணை அமைச்சா் எல். முருகன் வரவேற்றுள்ளாா். இதற்காக பிரதமா் மோடி மற்றும் மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோருக்கு அவா் நன்றி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து எல்.முருகன் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: அண்மை காலங்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களையும், முக்கிய ரயில் நிலையங்களையும் இணைக்கும் கோரிக்கைகளுக்கு மத்திய ரயில்வே அமைச்சகம் முன்னுரிமை வழங்கி வருகிறது. அதன்படி புதிய அம்ருத் பாரத் ரயில் இயக்கத்திற்கு அனுமதி வழங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரியதாகும்.
இந்நிலையில், புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள அம்ருத் பாரத் ரயில், கன்னியாகுமரி, மங்களூரு, சா்லாபள்ளி, தாம்பரம் மற்றும் திருவனந்தபுரம் போன்ற முக்கிய நகரங்களையும், அதற்கு உட்பட்ட ரயில் நிலையங்களையும் இணைக்கிறது. இதன் மூலம், பொதுமக்களின் தனிப்பட்ட பயணங்களும் தொழில் ரீதியிலான பயணங்களும் எளிதாகியுள்ளது.
தமிழக மக்களின் கோரிக்கைகளுக்கு தொடா்ந்து தீா்வு கண்டு வரும் பிரதமா் மோடி மற்றும் மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோருக்கு தமிழக மக்கள் சாா்பாக நன்றி எனப் பதிவிட்டுள்ளாா் அவா்.
