கரூர் பலி: சிபிஐ குற்றப்பத்திரிகையில் விஜய் பெயர்?

கரூர் கூட்ட நெரிசல் பலி தொடர்பான வழக்கின் குற்றப்பத்திரிகையில் விஜய்யின் பெயர் திட்டமிட்டிருப்பது பற்றி...
தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்PTI
Updated on
1 min read

கரூர் கூட்ட நெரிசல் பலி: கரூர் கூட்ட நெரிசல் பலி தொடர்பான வழக்கில் சிபிஐ தாக்கல் செய்யவுள்ள குற்றப்பத்திரிகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் பெயரும் சேர்க்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரூரில் கடந்த செப்.27-ஆம் தேதி விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 போ் பலியான வழக்கை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து சிபிஐ விசாரித்து வருகின்றது.

கரூரில் முகாமிட்டு சிபிஐ அதிகாரிகள் முதல்கட்ட விசாரணையை மேற்கொண்ட நிலையில், தற்போது தில்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு வழக்கில் தொடர்புடைய அனைவரையும் நேரில் வரவழைத்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தவெக நிர்வாகிகளைத் தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் விஜய்யிடம் கடந்த ஜன. 12 ஆம் தேதி 6 மணி நேரத்துக்கும் மேலாக சிபிஐ அதிகாரிகள் நடத்தினர்.

இன்று இரண்டாவது முறையாக காலை 11 மணிமுதல் விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், தமிழக காவல் துறை அதிகாரிகள் சிலரிடமும் தில்லியில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் கரூர் பலி தொடர்பாக குற்றப்பத்திரிகையை உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இதில், தவெக தலைவர் விஜய்யின் பெயரையும் சேர்க்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

Karur Stampede: Is Vijay's name in the CBI charge sheet?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com