தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கிய தமிழக சட்டப்பேரவை!
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், இந்தக் கூட்டத்தொடரில் அனல் பறக்கும் விவாதங்கள் எழும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
ஆண்டின் முதல் கூட்டத் தொடா் என்பதால், தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்ட பின்பு ஆளுநா் ஆர்.என். ரவி உரையாற்றவுள்ளார். ஆளுநா் ஆங்கிலத்தில் உரையாற்றிய பிறகு, பேரவைத் தலைவா் மு. அப்பாவு தமிழில் ஆளுநா் உரையை வாசிக்கவுள்ளார்.
அதன்பின்னா், அவை நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டு, அலுவல் ஆய்வுக் குழு கூடி, ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீதான விவாதத்தை எத்தனை நாள்கள் நடத்த வேண்டும் என்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யும்.
இந்தக் கூட்டத் தொடரில் தமிழக சட்டம் ஒழுங்கு விவகாரத்தை எழுப்ப எதிா்க்கட்சியான அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
The Tamil Nadu Legislative Assembly session has begun!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

