திமுகவில் இணைவார் எனக் கூறப்பட்டு வந்த குன்னம் ராமச்சந்திரனின் திடீர் முடிவு?

திமுகவில் இணைவார் என்று கூறப்பட்டு வந்த குன்னம் ராமச்சந்திரன் அரசியலிலிருந்து விலகுவதாக அறிவிப்பு
குன்னம் ராமச்சந்திரன்
குன்னம் ராமச்சந்திரன்
Updated on
1 min read

சென்னை: ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்த வைத்திலிங்கம் திமுகவில் இணைந்த நிலையில், குன்னம் ராமச்சந்திரனும் இணைவார் எனக் கூறப்பட்ட நிலையில், அவர் அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

பெரம்பலூரைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ குன்னம் ராமச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், அரசியல் பொதுவாழ்வில் இருந்து விலகுகிறேன். குடும்பத்தினர் கூறியதால் திமுகவில் இணையும் முடிவில் இருந்து பின்வாங்கினேன். எனக்கு எந்த அரசியல் கட்சியிலும் இணையும் எண்ணமில்லை என்று தெரிவித்துள்ளார்.

குன்னம் ராமச்சந்திரன், ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்தார். ஏற்கனவே, ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் வைத்திலிங்கம் என்று திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். குன்னம் ராமச்சந்திரனும் திமுகவில் இணைவார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், இன்று இந்த முடிவை அவர் அறிவித்துள்ளார்.

திமுகவில் இணைவதற்கு திட்டமிட்டிருந்த நிலையில், அதற்கு குடும்பத்தினர் ஒப்புக் கொள்ளாததால், அரசியலிலிருந்து விலகுவதாக இன்று அவர் கூறியிருக்கிறார். கடந்த 2016ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில், குன்னம் தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனவர்.

அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழு என்ற அமைப்பை உருவாக்கினார். இதில் ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த தஞ்சை ஒரத்தநாடு தொகுதி எம்எல்ஏ வைத்திலிங்கம் தனது பதவியை நேற்று ராஜிநாமா செய்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் அப்பாவுவிடம் தனது ராஜிநாமா கடிதத்தை வழங்கிய பின், அண்ணா அறிவாலயம் சென்று முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். வைத்திலிங்கத்துடன் அவரது மகன் பிரபுவும் திமுகவில் இணைந்தார்.

வைத்திலிங்கம் இதுவரை 4 முறை ஒரத்தநாடு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர், முன்னாள் அமைச்சராகவும் இருந்துள்ளார்.

ஏற்கனவே, ஓபிஎஸ் ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ், முன்னாள் எம்எல்ஏ சுப்புரத்தினம் ஆகியோர் திமுகவில் இணைந்தனர். அதிமுகவில் இருந்து விலகிய செங்கோட்டையன் விஜய்யின் தவெகவில் இணைந்தார். விரைவில் குன்னம் ராமச்சந்திரன் திமுகவில் இணைவார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அவர் அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

Summary

Kunnam Ramachandran, who was rumored to be joining DMK, announces his retirement from politics

குன்னம் ராமச்சந்திரன்
ஓபிசி-என்சிஎல் தகுதிச் சான்றிதழ் எத்தனை நாள்கள் செல்லும்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com